மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 மே 2021

ஐபிஎல் நடத்துவதில் சிரமம் ஏன்?

ஐபிஎல் நடத்துவதில் சிரமம் ஏன்?

ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளை இந்தியாவில் நடத்துவது மிகுந்த சிரமம் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும், கொரோனா தொற்றினால் தற்போது விளையாட்டுத்துறை பாதிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தற்போது ஐபிஎல் தொடரும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சில தினங்களுக்கு முன்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதனால் அனைத்து வீரர்களின் நலன் கருதி தற்போது ஐபிஎல் போட்டி மறு தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் தற்போது தங்களது சொந்த நாட்டுக்குச் சென்று விட்டனர்.

ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் எப்போது, எங்கு நடைபெறும் என்று தொடர்ந்து கேள்விகள் எழுப்பும் வண்ணம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தொடர்ந்து ஐபிஎல் போட்டி நடத்துவது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி, “ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளை இந்தியாவில் நடத்துவது மிகுந்த சிரமம். தற்போது இந்தத் தகவலினால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதைத் தொடர்ந்து விரைவில் போட்டி நடத்துவது குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று செய்தியாளர்கள் சந்திப்பில். கூறியுள்ளார்.

சமீபத்தில், பயோபபுளுக்குள் கொரோனா நுழைந்தது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி பேசியிருந்தார். “எங்கே, எப்படி தவறு நடந்திருக்கிறது என விசாரிக்கத் தொடங்கியிருக்கிறோம். இந்தச் சம்பவத்தில் ஒரு முழுமையான பிரேத பரிசோதனை செய்ய வேண்டியிருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள், அதாவது 14ஆவது ஐபிஎல் சீசன் நடத்தி முடிக்கவில்லையென்றால் 2500 கோடி ரூபாய் பிசிசிஐக்கு நஷ்டம் ஏற்படும்'' என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

புதிய ஐபிஎல் அணிகள்: சர்ச்சைப் பின்னணி!

7 நிமிட வாசிப்பு

புதிய ஐபிஎல் அணிகள்:  சர்ச்சைப் பின்னணி!

சமந்தாவுக்கு உதவும் ஷில்பா ஷெட்டி வழக்கின் தீர்ப்பு!

3 நிமிட வாசிப்பு

சமந்தாவுக்கு உதவும் ஷில்பா ஷெட்டி வழக்கின் தீர்ப்பு!

டி20 உலகக் கோப்பை: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த பாகிஸ்தான்! ...

3 நிமிட வாசிப்பு

டி20 உலகக் கோப்பை: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த பாகிஸ்தான்!

செவ்வாய் 11 மே 2021