மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 மே 2021

தள்ளிப்போகும் சிம்புவின் மாநாடு!

தள்ளிப்போகும் சிம்புவின் மாநாடு!

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, மற்றும் கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு.

இந்தப் படத்தை ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். , யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இன்னும் ஓரிரு நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருக்கிறது. இதனை எங்குப் படமாக்கலாம் என்று திட்டமிட்டு வருகிறது படக் குழு.

இதுவரை முடிக்கப்பட்ட காட்சிகளுக்கான இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப் படத்தில் அப்துல் காலிக் என்கிற கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் முதல் பாடல் ரம்ஜான் தினத்தன்று வெளியாகும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த மே 9ம் தேதியன்று, படத்தின் இயக்குநரான வெங்கட் பிரபுவின் தாயார் மணிமேகலை உடல் நலக் குறைவு காரணமாகக் காலமானார்.

இதைத் தொடர்ந்து ‘மாநாடு’ படக் குழுவினர், மற்றும் திரையுலகினர், இயக்குநர் வெங்கட்பிரபு, பிரேம்ஜி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர். இந்த நேரத்தில் மாநாடு படத்தின் முதல் பாடல் வெளியீட்டையும் ஒத்தி வைத்துள்ளதாகத் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி இன்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “நம் இஸ்லாமிய உறவுகள் கொண்டாடும் ரம்ஜான் தினத்தன்று வெளியிடுவதாக இருந்த நமது மாநாடு படத்தின் ‘first single’ நமது இயக்குநர் வெங்கட் பிரபு தாயாரின் மறைவின் வருத்தத்தில் பங்கு கொள்ளும் பொருட்டு இன்னும் சில நாட்கள் தள்ளி வெளியாக உள்ளது என்பதை வருத்தமுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னொரு தேதியில் ;first single’ வெளியிடுவோம். அதற்கான அறிவிப்பை விரைவில் தெரிவிப்போம். நண்பர்களின் துக்கத்தில் பங்குகொள்வோம். கொண்டாட்டத்தையும் தாண்டி கவனமாக இருங்கள். விரைந்து மீள்வோம். நன்றி சகோதரர்களே” என்று குறிப்பிட்டுள்ளார்.

-இராமானுஜம்

ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

3 நிமிட வாசிப்பு

ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

ஐபிஎல் 2021: நான்காவது முறையாகக் கோப்பையை வென்ற சென்னை அணி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல் 2021: நான்காவது முறையாகக் கோப்பையை வென்ற சென்னை அணி!

அண்ணாத்த டீசர் முழுவதும் ரஜினி

5 நிமிட வாசிப்பு

அண்ணாத்த டீசர் முழுவதும் ரஜினி

செவ்வாய் 11 மே 2021