மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 மே 2021

சீரியல் ஷூட்டிங்கிற்கு அனுமதியா?

சீரியல் ஷூட்டிங்கிற்கு அனுமதியா?

கொரோனா தொற்று, பாதிப்புகள், உயிர் இழப்புகள் ஒவ்வொரு நாளும் உச்சம் தொட்டுக்கொண்டு வருவதால், தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது,

சினிமா, தொலைக்காட்சி ஷூட்டிங்கிற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புகளுக்கு மட்டும் ஊரடங்கிலிருந்து விதிவிலக்கு வழங்க வேண்டும் என்று ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது. அதற்கு அவர்கள் கூறும் காரணம், இந்த கொரோனா பேரிடர் காலத்தில் பலவிதமான மன அழுத்தங்களுடன் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் மக்களை, அந்த அழுத்தத்திலிருந்து சற்றேனும் விடுவிக்கும் ஒரேயொரு பொழுதுபோக்கு தொலைக்காட்சி தொடர்கள் மட்டுமே. அவை தொடர்ந்து ஒளிபரப்பாக வேண்டுமெனில் படப்பிடிப்பு நடைபெற வேண்டும். அதற்கு அரசு அனுமதி தர வேண்டும் என சின்னதிரை தரப்பிலிருந்து தமிழக அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.

பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இதுகுறித்துப் பேசியிருக்கிறார். “தொலைக்காட்சி படப்பிடிப்பு மூலம் அதை நம்பி நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ்கின்றன. தினமும் எத்தனை சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன என்கிற விவரத்தைப் பார்த்தாலே, ஒரு தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டால் எத்தனை குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். சீரியல்களில் பணிபுரிபவர்கள் வேறு தொழில்களில் ஈடுபட வாய்ப்பில்லாததால், இந்தப் பேரிடர் காலத்தில் இந்த ஷூட்டிங் அவர்களுக்கு மிகவும் அவசியமானதாகப்படுகிறது. அதனால், ஏற்கெனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அப்படியே கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தி சீரியல்களின் ஷூட்டிங்கிற்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும்’’ என்று ஆர்.கே.செல்வமணி முதல்வரிடம் கூறியிருக்கிறார்.

தற்போதைய சூழலில் அனைத்து தொலைக் காட்சிகளிலும் இரு வாரங்களுக்கான எபிசோடுகள் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தால் மட்டுமே அடுத்தடுத்த வாரங்களுக்கான எபிசோடுகளை எந்தத் தடங்கலும் இல்லாமல் தயாரிப்பாளர்கள் வழங்க முடியும்.

இந்நிலையில் அரசிடமிருந்து தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பிற்கு அனுமதி கிடைக்க வாய்ப்பிருக்கிறதா என விசாரித்தபோது, “இன்று மாலை செய்தி விளம்பர துறை அமைச்சர் இது தொடர்பாக ஒரு ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்ட சொல்லியிருக்கிறார். அந்த கூட்டத்தில் சாதகமான முடிவு கிடைக்கும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அதனால் தொலைக்காட்சி தொடர்களுக்கான படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைக்கும் என்கிறது” சின்னதிரை தயாரிப்பு வட்டாரம்

படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களிடம் பேசிய போது, “சமூக இடைவெளி, அடிக்கடி கை கழுவுதல் என எல்லா பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றி ஷூட்டிங் நடத்தினாலும் படப்பிடிப்பு தளத்திலிருந்தவர்களுக்கு கொரோனா பரவுகிறது. பல சீரியல்களில் நடிகர் நடிகைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், நடிகர் நடிகைகளை மாற்றி படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது தான் யதார்த்த நிலைமை.

மேலும் நடிகர்கள் மாஸ்க் போட்டு நடிக்கமுடியாது. நெருக்கமான காட்சிகள் இல்லாமலும் சீரியலை எடுக்கமுடியாது. ஒரு சிறிய வீட்டுக்குள் 50- 60 பேர் கூடி இருக்கும்போது தொழில்நுட்பக் கலைஞர்கள் என்னதான் மாஸ்க் போட்டிருந்தாலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நடிகர்களைப் பொருத்தவரை ஒவ்வொரு நாளும் அச்சத்துடன் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டியுள்ளது. தொலைக்காட்சி தொடர்கள் சினிமா பிரம்மாண்டங்களுக்கு இணையாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது. தொழில் முடக்கம் என்று வருகிற போது அந்தந்த தொழில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மூலதன நஷ்டம், வருவாய் இழப்பு என்பது தவிர்க்க முடியாது. அது தொலைக்காட்சி தொடர்களுக்கும் பொருந்தும் நாம் மட்டும் அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பது சரியல்ல .

இந்த இக்கட்டான சூழலில் அதிகமாக வருவாய் இழப்பின் காரணமாக பாதிக்கப்படப்போவது இத்தொழிலை நம்பியுள்ள தினக்கூலி தொழிலாளர்கள் மட்டுமே தொலைக்காட்சி தொடர்கள் மூலம் கோடிக் கணக்கில் வருமானமும், லாபமும் அடைந்த தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர்கள், அதனை ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள் இவர்களைப் பொருளாதார ரீதியாக உதவி செய்து காப்பாற்றவேண்டும்” என்கின்றனர்.

-இராமானுஜம்

புதிய ஐபிஎல் அணிகள்: சர்ச்சைப் பின்னணி!

7 நிமிட வாசிப்பு

புதிய ஐபிஎல் அணிகள்:  சர்ச்சைப் பின்னணி!

சமந்தாவுக்கு உதவும் ஷில்பா ஷெட்டி வழக்கின் தீர்ப்பு!

3 நிமிட வாசிப்பு

சமந்தாவுக்கு உதவும் ஷில்பா ஷெட்டி வழக்கின் தீர்ப்பு!

டி20 உலகக் கோப்பை: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த பாகிஸ்தான்! ...

3 நிமிட வாசிப்பு

டி20 உலகக் கோப்பை: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த பாகிஸ்தான்!

செவ்வாய் 11 மே 2021