மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 மே 2021

மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான். ஆர்.கே.செல்வமணி இயக்கிய ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் சந்தன கடத்தல் வீரப்பன் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய வில்லன் நடிகர்களில் ஒருவராக மாறினார். அதனைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் வில்லனாக நடித்தார். சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்

அரசியலில் ஏற்பட்ட ஆர்வத்தால் நாம் தமிழர் கட்சியில் இணைந்து கடந்த மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய மன்சூர் அலிகான், தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற ஒரு கட்சியைத் தொடங்கி, கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு 41 வாக்குகளே கிடைத்தன.

இந்நிலையில் மன்சூர் அலிகான் உடல்நலக் குறைவால் சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மரு‌த்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று காலை (மே 10) அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகக் கல் பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வந்ததால் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

-இராமானுஜம்

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

3 நிமிட வாசிப்பு

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

திங்கள் 10 மே 2021