மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 மே 2021

கங்கை அமரன் மனைவி மறைவு!

கங்கை அமரன் மனைவி மறைவு!

திரையுலகைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களில் தொடர்ந்து மரணங்கள் நிகழ்ந்து வருகிறது. இயக்குநர்கள் தாமிரா, கே.வி.ஆனந்த், நடிகர்கள் விவேக், பாண்டு என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். இசையமைப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர். ‘மௌன கீதங்கள்’, ‘வாழ்வே மாயம்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இவர், ‘கோழி கூவுது, கரகாட்டக் காரன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இது தவிர நூற்றுக்கணக்கான பாடல்களையும் எழுதியுள்ளார்.

கங்கை அமரனுக்கு வெங்கட் பிரபு, பிரேம்ஜி என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர். பிரேம்ஜி நகைச்சுவை நடிகராகவும், இசையமைப்பாளராகவும் உள்ளார்.

கங்கை அமரனின் மனைவியான மணிமேகலை உடல் நலக் கோளாறு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று (மே 10) இரவு 11.30 மணியளவில் மணிமேகலை காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

-இராமானுஜம்

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

2 நிமிட வாசிப்பு

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

4 நிமிட வாசிப்பு

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

பிக்பாஸ் ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

5 நிமிட வாசிப்பு

பிக்பாஸ்  ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

திங்கள் 10 மே 2021