மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 மே 2021

கங்கனா மீது வழக்குப்பதிவு!

கங்கனா மீது வழக்குப்பதிவு!

பாஜகவின் ஆதரவாளராக அறியப்படும் இந்தி நடிகை கங்கனா ரனாவத் தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். மஹாராஷ்ராவில் சிவசேனை கட்சியை விமர்சனம் செய்ததால் அவர் மீது காவல்துறை வழக்குபதிவு செய்தது. அத்துடன் விடாமல் மும்பையில் உள்ள கங்கனாவின் அலுவலகம் அனுமதி பெறாமல் கட்டப்பட்டு இருப்பதாக கூறி அதன் ஒரு பகுதியை அரசாங்கம் இடித்தது. அதனை நிறுத்த உயர் நீதிமன்றம் வரை சென்றார் கங்கனா ரனாவத்.

இந்த குழலில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கடந்த சனிக்கிழமை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். அதோடு, கொரோனா சிறிய காய்ச்சல் தவிர, வேறு ஒன்றும் இல்லை எனவும் கங்கனா ரனாவத் கூறியிருந்தார்.

கங்கனா ரனாவத் தனது பதிவில், "மக்களே, எதற்கும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் சக்தியை அனுமதிக்காதீர். நீங்கள் பயந்தால் அது உங்களை இன்னும் பயமுறுத்தும். வாருங்கள் இந்த கோவிட்-19 கிருமியை அழிப்போம். இது வெறும் சிறு காய்ச்சல் மட்டுமே. அதிகமான ஊடக வெளிச்சம் மக்களைப் பயமுறுத்தி வருகிறது” என பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், கங்கனா ரனாவத்தின் பதிவை தங்கள் விதிமுறைகளுக்கு எதிராக இருப்பதாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் நீக்கியது.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றதை தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள் நடந்ததை கண்டித்து கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்தில், வன்முறைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும், மம்தா பானர்ஜிக்கு மோடி பதிலடி கொடுக்க வேண்டும் என்றெல்லாம் பதிவுகளை பகிர்ந்தார். கங்கனாவின் பதிவுகள் ட்விட்டர் விதிமுறைகளுக்கு எதிராக இருப்பதாக அவரது ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிர்வாகம் முடக்கியது

மம்தா பானர்ஜி மந்திரிசபை இன்று பதவி ஏற்றுள்ளது. இந்த நிலையில் நடிகை கங்கனா ரனாவத் வன்முறையை தூண்டுவதாக திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அளித்த புகாரின் பேரில் அவர் மீது கொல்கத்தா போலீசார் 153 ஏ. 504, 505 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் கங்கனா ரனாவத் கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது

-இராமானுஜம்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

பிக்பாஸ் வெற்றியாளர் ராஜூ இறுதியில் பேசியது என்ன?

3 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் வெற்றியாளர் ராஜூ இறுதியில் பேசியது என்ன?

வெங்கட்பிரபுவின் மன்மத லீலை!

4 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவின் மன்மத லீலை!

திங்கள் 10 மே 2021