மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 மே 2021

ஹேமமாலினியின் 40 ஆண்டுக்கால நம்பிக்கை!

ஹேமமாலினியின் 40 ஆண்டுக்கால நம்பிக்கை!

தமிழ் சினிமா இயக்குநர்களால் நிராகரிக்கப்பட்டு இந்தி திரையுலகில் வாய்ப்பு தேடிச் சென்றவர் தமிழகத்தைச் சேர்ந்த நடிகை ஹேமமாலினி.

இந்தித் திரையுலகின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை ஹேமமாலினி. 1970இல் தர்மேந்திரா கதாநாயகனாக நடித்த 'தும் ஹசீன் மெயின் ஜவான்' என்ற படத்தின் மூலம் இந்தியில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப் படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

பொதுவாக இன்றைய இளம் நடிகர் நடிகைகள் அறிமுகமாகும் வரை வாய்ப்பு தேடி கொடுப்பதற்காக மேனேஜர் வைத்திருப்பார்கள். அதற்காக அவருக்கு எந்த ஊதியத்தையும் நட்சத்திரங்கள் கொடுப்பதில்லை. படத்தில் நடிப்பதற்கு என்ன சம்பளம் பேசி இறுதி செய்யப்படுகிறதோ அதில் சதவிகித அடிப்படையில் ஊதியம் கிடைக்கும்.

ஒன்றிரண்டு படங்களில் நடித்து பிஸியான நடிகையாகிவிட்ட பின்னர் பெரும்பாலும் நடிகைகள் தங்களுக்கு முதல் வாய்ப்பு கிடைக்க காரணமாக இருந்த மேனேஜரை மாற்றிவிடுவது தமிழ் சினிமாவில் சர்வசாதாரண நிகழ்வாகி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் கடந்த 40 வருடங்களாக தனது திரையுலக வாழ்க்கையில் தனது செயலாளராக 'மேத்தாஜி' என்பவரை பணியில் வைத்திருந்திருக்கிறார் நடிகை ஹேமமாலினி.

1980ஆம் ஆண்டு தர்மேந்திராவைக் காதலித்து திருமணம் செய்துகொண்ட ஹேமமாலினி, இப்போதும் வருடத்துக்கு ஒரு படத்திலாவது நடித்துவிடுவார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் ஹேமமாலினி, வெளியிட்ட பதிவில்,

“கனத்த இதயத்துடன் இதைப் பதிவிடுகிறேன். என்னுடன் 40 வருடங்களாக இருந்த, ஈடுபாடுடைய, கடும் உழைப்பாளியான, ஓய்வறியாத எனது செகரெட்டரி மேத்தாஜி அவர்களுக்கு விடை கொடுக்கிறேன். எனது குடும்பத்தில் ஒருவராகவே இருந்தவர். கொரோனா காரணமாக அவரை இழந்துவிட்டோம். அவர் ஈடு செய்ய முடியாதவர், அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது” என இரங்கல் தெரிவித்துள்ளார்.

- இராமானுஜம்

‘மருத’ படம் எப்படி?

4 நிமிட வாசிப்பு

‘மருத’ படம் எப்படி?

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' ரிலீஸ் எப்போது?

3 நிமிட வாசிப்பு

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு'  ரிலீஸ் எப்போது?

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

5 நிமிட வாசிப்பு

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

திங்கள் 10 மே 2021