மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 மே 2021

ஐபிஎல்: நடக்காத ஆட்டங்களை நடத்த இலங்கை விருப்பம்!

ஐபிஎல்: நடக்காத ஆட்டங்களை நடத்த இலங்கை விருப்பம்!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி கொரோனா பாதிப்பு காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஐபிஎல் போட்டியின் எஞ்சிய ஆட்டங்களை நடத்த தயாராக இருப்பதாக இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த (2020) ஆண்டு ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜாவில் செப்டம்பர் முதல் நவம்பர் வரை நடந்தது. இந்த (2021) ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கியது. சென்னை, மும்பையில் போட்டி முடிந்த நிலையில் டெல்லி, அகமதாபாத்தில் ஆட்டங்கள் நடைபெற்று கொண்டு இருக்கும்போது நான்கு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் (கொல்கத்தா), விருத்திமான் சகா (ஐதராபாத்), அமித் மிஸ்ரா (டெல்லி), ஆகியோருக்கு பாதிப்பு இருந்தது. அதோடு சென்னை அணியைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் எல்.பாலாஜி, மைக் ஹஸ்சி ஆகியோருக்கும் தொற்று உறுதியானது. இதனால் கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் போட்டியை பாதியில் நிறுத்தியது.

இந்த ஐபிஎல் சீசனில் 29 ஆட்டங்கள் முடிந்திருந்தது. 31 ஆட்டங்கள் இன்னும் எஞ்சியுள்ளன. எஞ்சிய ஐபிஎல் ஆட்டங்களை செப்டம்பர் மாதம் நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. டி20 உலகக் கோப்பைக்கு முன்பு இந்தப் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு தன்மையைப் பொறுத்து இறுதி முடிவு செய்யப்படும்.

இதற்கிடையே ஐபிஎல் எஞ்சிய ஆட்டங்களை நடத்த தயாராக இருப்பதாக இங்கிலாந்தில் உள்ள நான்கு கவுண்டிங் கிளப்புகள் அறிவித்திருந்தன.

இந்த நிலையில் ஐபிஎல் போட்டியின் எஞ்சிய ஆட்டங்களை நடத்த தயாராக இருப்பதாக இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் அர்ஜூன டி.செல்வா, “எங்களால் ஐபிஎல் போட்டியின் எஞ்சிய ஆட்டங்களை நடத்த முடியும். இதற்காக செப்டம்பரில் போட்டியை நடத்த மைதானங்கள் தயாராகிறது.

ஐபிஎல் போட்டியின் எஞ்சிய ஆட்டங்களை நடத்துவதற்கான வாய்ப்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டோம். ஆனால் அனைத்து காரணங்களுக்காகவும் இலங்கையைப் புறக்கணிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டும் ஐபிஎல் போட்டியை நடத்த இலங்கை விருப்பம் தெரிவித்தது. ஆனால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு முன்னுரிமை கொடுத்தது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து நீடித்தால் ஐபிஎல் நடக்காத ஆட்டங்களையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தவே கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

-ராஜ்

விஜய்யைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸை நிராகரித்த நடிகர்

4 நிமிட வாசிப்பு

விஜய்யைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸை நிராகரித்த நடிகர்

கமல் படத்துக்கு கிடைத்த கூடுதல் பலம்!

3 நிமிட வாசிப்பு

கமல்  படத்துக்கு கிடைத்த கூடுதல் பலம்!

விஜய்யை கடுப்பேற்றிய சம்பவம்!

4 நிமிட வாசிப்பு

விஜய்யை கடுப்பேற்றிய சம்பவம்!

ஞாயிறு 9 மே 2021