மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 மே 2021

பிரபலங்களின் அன்னையர் தின கொண்டாட்டம்!

பிரபலங்களின் அன்னையர் தின கொண்டாட்டம்!

உலகம் முழுவதும் அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அம்மா என்றழைக்காத உயிரில்லை. இன்றைய அன்னையர் தினத்தை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் சிலர் சமூகவலைதளங்களில் வாழ்த்துகளை வெளியிட்டுள்ளார்கள்.

இயக்குநர் சேரன்

என் அன்னைக்கும், அன்னை போலவே அனைத்து குழந்தைகள் மீதும் அன்பு காட்டும் அனைத்து மகளிர்க்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்..

கமல்ஹாசன்

என் குழையும் மழலையில் துவங்கி இன்று என் நாவில் புழங்கும் தமிழைப்போலவே நீயும், என்னோடு, எப்போதுமே நானாகிய நதி மூலமே தாயாகிய ஆதாரமே.

சரத்குமார்

எல்லையற்ற அன்பையும் ஒப்பில்லா தியாகத்தையும் அளித்து தங்கள் குழந்தைகளையே உலகம் என நேசித்திடும் அன்னைகளுக்கு இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள். கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆதரவற்ற தாய்மார்களுக்கு அவர்களது பிள்ளைகளாக இருந்து உதவுவோம்.

தேவிஸ்ரீ பிரசாத்

உலகின் சிறந்த அம்மாக்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள். ஒவ்வொரு நிமிடமும் தன்னலமின்றி, அயராது, உணர்ச்சியுடன், பாசமாக, எங்கள் கனவுகள் அனைத்தும் உண்மையாக வர அவர்களுக்கு நாம் என்ன செய்தோம். லவ் யு அம்மா.

நடிகர் மாதவன்

இனிய அன்னையர் தின வாழ்த்துகள். இந்த உலகத்திலும், சொர்க்கத்திலும் உங்கள் அன்பு, ஆசீர்வாதத்தை விட வேறு எந்த சக்தியுமில்லை.

நடிகை ஜனனி

கோபம், வெறுப்பு, பிடிவாதம் என தன் பிள்ளைகள் எதைக் காட்டினாலும் உன் மீது அன்பு மட்டுமே செலுத்தும் ஒரே ஜீவன் அம்மா. அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

சிபிராஜ்

அம்மா என்பவர் ஒரு குழந்தைக்குத் தாய் மட்டுமல்ல, அந்த குழந்தையின் முதல் ஆசிரியை, நல்ல நண்பர் மற்றும் வழிகாட்டி. அனைத்து அம்மாக்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

நீது சந்திரா

அவள் கட்டிப்பிடிக்கும் போது அதில் ஒரு மேஜிக் உள்ளது. அன்பு, அரவணைப்பு, வாழ்வில் நம்பமுடியாத ஒவ்வொரு நிகழ்விலும் என்னை சிறந்ததாக உணர வைக்கும். உலகில் உள்ள அனைத்து அம்மாக்களுக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள். எங்கள் பலமாக இருந்ததற்கு நன்றி. அம்மா நீ தான் என் மன அமைதி. இனிய அன்னையர் தினம். உன்னை நேசிக்கிறேன்.

-இராமானுஜம்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

ஞாயிறு 9 மே 2021