மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 8 மே 2021

பவித்ராவுக்கு குவிகிறது.. அஸ்வினுக்கு கை நழுவுகிறது !

பவித்ராவுக்கு குவிகிறது.. அஸ்வினுக்கு கை நழுவுகிறது !

வயது வேறுபாடின்றி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் உள்ளத்திலும் இடம் பிடித்துவிட்டது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருமே மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். அப்படி பிரபலமானவர்கள் குறித்த இரண்டு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது.

பவித்ராவுக்கு குவியும் வாய்ப்புகள்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு திரையுலகத்திலிருந்தும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. அப்படி, குக் வித் 2-வில் கலந்துகொண்டவர் பவித்ரா லக்‌ஷ்மி. தொடர்ச்சியாக, மியூசிக் வீடியோக்கள், குறும்படங்களில் நடித்துவருகிறார்.

சரத் என்பவரின் இயக்கத்தில் ஷேன் நிகம், ஹைன் தாமஸ் சாக்கோ நடித்திருக்கும் `உல்லாசம்' எனும் மலையாளப்படம் மூலமாக சினிமாவில் கால் பதித்தார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகியிருக்கிறார் பவித்ரா.

தமிழில் இரண்டு படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதில் ஒன்றுதான், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படம். இந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்குகிறார். இதில் ஹீரோவாக சதீஷ் நடிக்கிறார். இந்த செய்தி நமக்கு தெரியும்.

இரண்டாவதாக, தமிழ் - மலையாளம் பைலிங்குவலாக உருவாக இருக்காம். இதில் ஹீரோவாக கதிர் நடிக்கிறார். இந்தப் படத்தின் இயக்குநர் யார், தயாரிப்பாளர் யார் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. விரைவிலேயே அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

அஸ்வினுக்கு கை நழுவிய வாய்ப்பு !

குக் வித் கோமாளி மூலம் அறிமுகமான மற்றுமொரு போட்டியாளர் அஸ்வின். சிவாங்கியின் குறும்புத் தனத்தினால் அஸ்வினின் முகம் லைம் லைட்டுக்குள் வந்தது. சமீபத்தில் இவரின் குட்டி பட்டாஸ் பாடல் வெளியாகி பெரியளவில் வைரலானது.

தயாரிப்பு நிறுவனமான டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்கள் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் அஸ்வின். அதோடு, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தமானார்.

வணக்கம் சென்னை, காளி படங்களைத் தொடர்ந்து மூன்றாவது படத்தை இயக்க தயாராகிவருகிறார் உதயநிதி. மிகப்பெரிய அரசியல் பின்புலத்திலிருந்து இயக்குநராக வந்தவர் கிருத்திகா. ஆனால், அந்த மாதிரியான எந்த பகட்டும் அவரின் செயல்பாடுகளில் இருக்காது. அமைதியானவரும் கூட.

அப்படி இருக்கையில், உச்ச நடிகர்கள் காட்டும் கெத்தையும், திமிரையும் இப்போவே காட்டுகிறாராம் அஸ்வின். அவரின் செயல்களை விரும்பாத கிருத்திகா, அஸ்வினை தூக்கிவிட்டு அவருக்குப் பதில் காளிதாஸ் ஜெயராமை ஹீரோவாக மாற்றிவிட்டார். ஆளும் கட்சியின் குடும்பத்தைச் சேர்ந்தவரின் இயக்கத்தில் நடிக்காமல் வாய்ப்பை தவறவிடுவது நிச்சயம் அஸ்வினுக்கு மிகப்பெரிய சறுக்கல்தான்.

- தீரன்

விஜய்யைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸை நிராகரித்த நடிகர்

4 நிமிட வாசிப்பு

விஜய்யைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸை நிராகரித்த நடிகர்

கமல் படத்துக்கு கிடைத்த கூடுதல் பலம்!

3 நிமிட வாசிப்பு

கமல்  படத்துக்கு கிடைத்த கூடுதல் பலம்!

விஜய்யை கடுப்பேற்றிய சம்பவம்!

4 நிமிட வாசிப்பு

விஜய்யை கடுப்பேற்றிய சம்பவம்!

சனி 8 மே 2021