மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 8 மே 2021

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய வீரர்கள்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய வீரர்கள்!

ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணியில் தேர்வாகி உள்ள வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 18ஆம் தேதி முதல் ஜூன் 22ஆம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே ஐசிசி அறிவித்துள்ளது. இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணியினர் பற்றிய விவரம் நேற்று (ஏப்ரல் 7) மாலை அறிவிக்கப்பட்டது.

இந்திய அணியில், விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரோஹித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, மயங்க் அகர்வால், விஹாரி, ரிஷப் பண்ட், ஜடேஜா, அக்சர் படேல், வாசிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது சமி, சிராஜ், சர்துல் தாகூர், உமேஷ் யாதவ் தேர்வாகியுள்ளனர்.

பேக் அப் வீரர்களாக கே.எல்.ராகுல், சகா இடம் பெற்றுள்ளனர். காத்திருப்பு வீரர்களாக அபிமன்யு ஈஸ்வரன், பிரசீத் கிருஷ்ணா, அவேஷ் கான், அர்சான் நாக்வஸ்வல்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

-ராஜ்

.

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்: விரைவில் விசாரணை அறிக்கை!

2 நிமிட வாசிப்பு

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்:  விரைவில் விசாரணை அறிக்கை!

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார் ...

3 நிமிட வாசிப்பு

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார்

சனி 8 மே 2021