மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 8 மே 2021

படங்களை நேரடியாக வெளியிடத் தயாராகும் தயாரிப்பாளர்கள் சங்கம்!

படங்களை நேரடியாக வெளியிடத் தயாராகும் தயாரிப்பாளர்கள் சங்கம்!

தமிழ் சினிமா, கொரோனா தொற்று காரணமாக ஒட்டுமொத்தமாக முடக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு வருகிறது நடிகர் நடிகைகள் படப்பிடிப்புக்கு வர மறுத்து வருகின்றனர்.

இந்த சூழலில் தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியிலிருந்த அதிமுக தேர்தலில் தோல்வியைத் தழுவியது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை தமிழக ஆட்சி தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், தமிழ் சினிமாவை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான முயற்சியைத் தயாரிப்பாளர்கள் சங்கம் மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறது.

நேற்று காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், தலைமைச் செயலகத்தில் உள்ள தனது துறை சார்ந்த அலுவலகத்திற்கு வந்தார். அவர் வந்த சில நிமிடங்களில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன் கோரிக்கை மனுவையும் கொடுத்துவிட்டு வந்துள்ளனர்.

முன்னதாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் மே 6 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் நலன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதில், தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலினுக்கும், நமது சங்க உறுப்பினரும் திரைப்பட நடிகருமான உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு பெற்றதற்கும், தேர்தலில் வெற்றி பெற்ற நமது சங்க உறுப்பினர்கள் இசக்கி சுப்பையா, அம்பேத்குமார் ஆகியோருக்கும் வாழ்த்து தெரிவித்து செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், கூட்டத்தில் கொரோனா வேகமாகப் பரவி வரும் இந்தக் காலகட்டத்தில் தயாரிப்பாளர்களுக்கு உதவும் பொருட்டு நன்கொடை தருபவர்களிடம் பணம் பெற்று உதவலாம், என முடிவெடுக்கப்பட்டது உடனடியாக சங்கத்தின் பொருளாளரான எஸ்.சந்திர பிரகாஷ் ஜெயின் 10 லட்ச ரூபாயைச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கினார். மற்றவர்கள் தரும் பணத்தையும் சேர்த்து தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்யலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

தயாரிப்பாளர்களின் குடும்பத்தில் நடைபெறும் திருமணத்திற்கும், பள்ளிக் கல்வி/ கல்லூரிக் கல்விக் கட்டணத்திற்குச் சங்கத்தின் அறக்கட்டளையிலிருந்து நிதி வழங்குவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

வியாபாரம் ஆகாமல் இருக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களின் திரைப்படங்களை நமது சங்கம் மூலம் தொடங்க இருக்கும் ஓடிடியில் வெளியிட்டு உதவிடவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது

-இராமானுஜம்

பிக்பாஸ் 5: சன் மகிழ்ச்சி விஜய் அதிர்ச்சி!

2 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் 5: சன் மகிழ்ச்சி விஜய் அதிர்ச்சி!

மெட்டி ஒலி உமா மகேஸ்வரி காலமானார்!

2 நிமிட வாசிப்பு

மெட்டி ஒலி  உமா மகேஸ்வரி காலமானார்!

டி20 உலகக் கோப்பை இன்று தொடங்குகிறது!

5 நிமிட வாசிப்பு

டி20 உலகக் கோப்பை இன்று தொடங்குகிறது!

சனி 8 மே 2021