மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 8 மே 2021

கொரோனா நமக்கு வராது என்பது தவறு : சேரன்

கொரோனா நமக்கு வராது என்பது தவறு :  சேரன்

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் மிகக் கடுமையாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

தமிழ் சினிமாவில் மே 6 அன்று ஓரே நாளில் பாடகர் கோமகன், நடிகர் பாண்டு இருவரும் கொரோனா தொற்றுக்குப் பலியாகினர். இயக்குனர் பாக்யராஜ், அவரது மனைவி பூர்ணிமா இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

முன்னணி நடிகர்கள் நடித்து வந்த படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. படப்பிடிப்புக்கு வருவதற்கு நடிகர் நடிகைகள் மறுத்துவருகின்றனர்.

இதனிடையே கொரோனா இரண்டாவது அலை அச்சுறுத்தல் தொடர்பாக இயக்குநர் சேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“கொரோனா தொற்றை முறியடிக்க மக்கள் அனைவரும் அக்கறையோடு முயல்வதே தீர்வு. என்னதான் அரசும் அரசுத் துறைகளும் முயன்றாலும் தனி மனித சிந்தனையில் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கான முன்னேற்பாடு இல்லாதவரை கொரோனா ஆபத்துகளைக் கடப்பது கடினம். நமக்கு வராது என்ற சிந்தனை யாருக்கும் வேண்டாம்.

கொரோனாவிற்கு உருவம் அல்லது ஒரு மனிதனைச் சித்திரவதை செய்து ரத்தம் கக்கிச் சாகும் குணம் இல்லாததால் யாருக்கும் அதைப் பற்றிய பயம் இல்லையோ என்னவோ. என் நண்பர் ஒருவர். எல்லா வசதிகளும் இருந்தும் அவரை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. அவ்வளவு கொடுமையானது இந்நோய்.

அத்தியாவசியத் தேவைகளுக்கான தொழில் செய்பவர்கள், முன்களப் பணியாளர்கள், மருத்துவத்துறை, போக்குவரத்துத் துறையில் பணிபுரிவோர், காவல்துறை, செய்தித்துறை. இவர்கள் எல்லாம் நம் பாதுகாப்புக்காகக் களத்தில் நிற்கிறார்கள். அவர்களுக்கும் குடும்பம், உறவுகள் இருக்கிறார்கள். இன்னும் எத்தனை நாட்கள் அவர்களை இந்த சிரமத்திற்கு ஆளாக்கப் போகிறோம்.

ஆகவே நமக்கு எங்கிருந்தோ எல்லாம் கிடைத்துவிடுகிறது என்று கருதாமல் நோயை விரைவில் விரட்டியடிக்க ஒத்துழைக்க வேண்டியது நம் கடமை. ஆகவே நோய் இருப்பதற்கான காரணம் தெரிந்த உடனே சிகிச்சை எடுங்கள். நோயற்றவர்கள் பாதிப்பு வராமல் தடுக்க முழு முயற்சி எடுங்கள்" என்று கூறியுள்ளார் சேரன்.

-இராமானுஜம்

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

2 நிமிட வாசிப்பு

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

2 நிமிட வாசிப்பு

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

10 நிமிட வாசிப்பு

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

சனி 8 மே 2021