மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 மே 2021

‘இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும்’: சூர்யா வாழ்த்து!

‘இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும்’: சூர்யா வாழ்த்து!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.

அந்தவகையில் நடிகர் சூர்யாவின் வாழ்த்துச் செய்தியில், “முடித்தே தீரவேண்டிய பல காரியங்கள் வரிசைகட்டி முன் நிற்க சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றிபெற்று மக்களின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

சுவாசிப்பதற்கு உயிர் காற்று கூட கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிற இந்தப் பேரிடர் காலத்தில் நீங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. தங்கள் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி அடையும் என்று நம்புகிறோம்.

தங்களுக்கும் ஆற்றலும் அனுபவம் நிறைந்த தமிழக அமைச்சர் பெருமக்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள் தமிழகத்தின் உரிமைகளை மீட்கத் தமிழர்களின் ஒரு மித்த குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். “முடியுமா நம்மால் என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம். முடித்தே தீருவேன் என்பது வெற்றிக்கான தொடக்கம்" என்ற முத்தமிழ் அறிஞர் கலைஞரின் புகழ்பெற்ற வசனத்தை மேற்கோள் காட்டி வாழ்த்து கூறியுள்ளார் சூர்யா.

-இராமானுஜம்

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

3 நிமிட வாசிப்பு

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

3 நிமிட வாசிப்பு

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

2 நிமிட வாசிப்பு

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

வெள்ளி 7 மே 2021