மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 மே 2021

இயக்குநர் பாக்யராஜூக்கு கொரோனா!

இயக்குநர் பாக்யராஜூக்கு கொரோனா!

பிரபல இயக்குநர் கே.பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா முதல் அலையை விட தீவிரமாக இருக்கும் இரண்டாம் அலையில் திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல், கொரோனாவால் திரை பிரபலங்கள் உயிரிழப்பதும் சமீப காலத்தில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இயக்குநர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பாக்யராஜ் மகனும் நடிகருமான சாந்தனு தனது ட்விட்டரில்,"என் பெற்றோர் கே.பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எங்கள் வீட்டில் உள்ள பணியாளர்கள் உட்பட அனைவரும் மருத்துவரின் அறிவுரையின் பேரில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். கடந்த 10 நாட்களில் எங்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் தயவு செய்து கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் சீக்கிரம் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

-வினிதா

விஜய்யைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸை நிராகரித்த நடிகர்

4 நிமிட வாசிப்பு

விஜய்யைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸை நிராகரித்த நடிகர்

கமல் படத்துக்கு கிடைத்த கூடுதல் பலம்!

3 நிமிட வாசிப்பு

கமல்  படத்துக்கு கிடைத்த கூடுதல் பலம்!

விஜய்யை கடுப்பேற்றிய சம்பவம்!

4 நிமிட வாசிப்பு

விஜய்யை கடுப்பேற்றிய சம்பவம்!

வெள்ளி 7 மே 2021