மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 மே 2021

விஜய் போட்ட கட்டளை.. விஜய் 65 நிறுத்த காரணம் !

விஜய் போட்ட கட்டளை.. விஜய் 65 நிறுத்த காரணம் !

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய்க்கு அடுத்தப் படமாக ‘விஜய் 65’ உருவாகிவருகிறது. நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் அனிருத் இசையில், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்படம் உருவாகிவருகிறது.

விஜய் 65-க்கான முதல் கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்திருக்கிறது. இரண்டாம் கட்ட ஷூட்டிங் சென்னையில் நடத்த படக்குழு திட்டமிட்டிருக்கிறது. அதற்காக, பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் செட் ஒன்றை உருவாக்கிவருவதாக கூட நம்முடைய தளத்தில் செய்தியைப் பதிவிட்டிருந்தோம். படத்தின் பிரதான பல காட்சிகள் இந்த ஷாப்பிங் மால் செட்டில் எடுக்க இருக்கிறார்கள். எப்படியும், 40 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். படக்குழுவின் திட்டத்தின் படி, மே 03ஆம் தேதி சென்னை படப்பிடிப்பை துவங்க இருந்தார்கள். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப் போகிறது.

படப்பிடிப்பு தள்ளிப் போக காரணம் விஜய் தான் என்கிறார்கள். கொரோனா அச்சுறுத்தல் அதிகமாவதால் படப்பிடிப்பை தள்ளிவைத்துக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். அதனால், படப்பிடிப்பு நடக்கவில்லை என்றாலும் செட் அமைக்கும் பணிகள் மட்டும் மும்மரமாக நடந்துவந்திருக்கிறது. இந்த செய்தியைக் கேள்விப் பட்டதும் உடனடியாக வேலைகளை நிறுத்தச் சொல்லி கட்டளைப் போட்டிருக்கிறார்.

செட் வேலை செய்பவர்களுக்கு கொரோனா வராதா? அவர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறதே.. அதனால் முழுமையாக ஷுட்டிங் வேலைகளை நிறுத்துங்கள் என்று கூறியதாகத் தெரிகிறது. அதனால், விஜய் 65 படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட ஒட்டுமொத்தப் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் நடக்க வேண்டிய படப்பிடிப்பு தள்ளிப் போவதால், தொடர்ந்து ஹைதராபாத் ஷெட்யூலும் தள்ளிப் போகும் என்கிறார்கள். எப்படியும், அடுத்த வருட பொங்கலுக்கு தான் ‘விஜய் 65’ ரிலீஸ் திட்டமிட்டிருப்பதால் பதட்டமில்லாமல் இருக்கிறதாம் படக்குழு.

- தீரன்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்: விரைவில் விசாரணை அறிக்கை!

2 நிமிட வாசிப்பு

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்:  விரைவில் விசாரணை அறிக்கை!

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார் ...

3 நிமிட வாசிப்பு

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார்

வெள்ளி 7 மே 2021