மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 மே 2021

விரைவில் மீண்டு வருவேன்: வசந்தபாலன்

விரைவில் மீண்டு வருவேன்: வசந்தபாலன்

வெயில், அங்காடித்தெரு, அரவான், காவியத்தலைவன் எனச் சில படங்கள் மட்டுமே இயக்கி இருந்தாலும் தமிழில் கொண்டாடப்படும் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராகப் பார்க்கப்படும் இயக்குநர் வசந்தபாலன். இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், “அன்புள்ள நண்பர்களுக்கு, நான் கொரோனோ பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். ஆதலால், பலருடைய தொலைபேசி அழைப்பை எடுக்க முடியவில்லை. என் மீது பேரன்பு கொண்ட நண்பர்கள், மருத்துவர்கள், உறவினர்கள் சூழ இருக்கிறேன் என்பதே மனதிற்குள் ஆயிரம் யானை பலம் கூடி வருகிறது. 'ஈராறு கால்கொண்டெழும் புரவியாய்' மீண்டும் எழுந்து வருவேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான 'வெயில்' படத்துக்கு தேசிய விருது கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ரியாவுக்கு கொரோனா

தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இவரது பாத்திரப் படைப்புகளால் தனக்கென்று ரசிகர் வட்டத்தைக் கொண்டிருக்கும் நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "கடந்த வாரம் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. என்னை கவனித்துக்கொண்ட நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் நன்றி. தற்போது நான் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். நன்றாக குணமடைந்து வருகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

-இராமானுஜம்

விஜய்யைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸை நிராகரித்த நடிகர்

4 நிமிட வாசிப்பு

விஜய்யைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸை நிராகரித்த நடிகர்

கமல் படத்துக்கு கிடைத்த கூடுதல் பலம்!

3 நிமிட வாசிப்பு

கமல்  படத்துக்கு கிடைத்த கூடுதல் பலம்!

விஜய்யை கடுப்பேற்றிய சம்பவம்!

4 நிமிட வாசிப்பு

விஜய்யை கடுப்பேற்றிய சம்பவம்!

வெள்ளி 7 மே 2021