மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 6 மே 2021

விஜய்யுடன் நடிக்கும் மலையாள நடிகர் !

விஜய்யுடன் நடிக்கும் மலையாள நடிகர் !

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய் 65’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துவிட்டது.

விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டே, காமெடி ரோலில் யோகிபாபு நடிக்கிறார்கள். படத்தில் வில்லன் யாரென்பதை மட்டும் சன்ஸ்பென்ஸில் வைத்திருக்கிறது படக்குழு. சன்பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் படத்துக்கு இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா படத்துக்கு ஒளிப்பதிவு மேற்கொண்டு வருகிறார்.

விஜய் 65-க்கான இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை சென்னையில் துவங்க இருக்கிறது படக்குழு. அதற்காக, பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் செட் ஒன்றை உருவாக்கிவருகிறார்கள். படத்தின் பிரதான பல காட்சிகள் இந்த ஷாப்பிங் மால் செட்டில் எடுக்க இருக்கிறார்கள். கொரோனா அச்சுறுத்தலால் சென்னையின் அனைத்து ஷாப்பிங் மால்களும் அடைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், செட் அமைத்து ஷூட்டிங் எடுக்கிறார்கள். அதோடு,எந்த பகுதியில் இந்த செட் உருவாகிவருகிறது என்கிற தகவலிலும் ரகசியம் காக்கிறார்கள். ஷூட்டிங் ஸ்பாட் தெரிந்துவிட்டால் ரசிகர்கள் கூட்டமாக வந்துவிட வாய்ப்பு இருக்கிறது. இந்த கொரோனா காலத்தில் ரசிகர்களின் நலனில் விஜய் அக்கறை கொள்வதால் ஷூட்டிங் இடங்களில் ரகசியம் காக்க வேண்டுமென உத்தரவு போட்டிருக்கிறாராம்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்போதைக்கு ஷூட்டிங்கிற்கு ப்ரேக் விட்டிருக்கிறார்கள். அதோடு, பூஜா ஹெக்டேவுக்கு சமீபத்தில் கொரோனா பாசிட்டிவ் வந்தது. அவரும் குணமாகி, படப்பிடிப்புக்கு வர வேண்டுமென்பதால் காத்திருக்கிறார்கள். இந்நிலையில், தனக்கு நெகட்டிவ் வந்துவிட்டதாகவும், வீட்டில் ஓய்வில் இருப்பதாகவும் பூஜா ஹெக்டே தெரிவித்திருக்கிறார். அவர் ட்விட்டரில், “ஸ்டுப்பிட் கொரோனாவ எட்டி உதைத்துவிட்டேன்” என்று சர்காஸ்டிக்காக ட்விட் செய்துள்ளார்.

இரண்டாம் கட்ட ஷூட்டிங்கை சென்னையில் முடித்துவிட்டு, அடுத்தக் கட்டமாக ஹைதராபாத் பிலிம் சிட்டியில் அடுத்தக் கட்ட ஷூட்டிங்கை நடத்தவும் திட்டமாம். ஆனால், இந்த கொரோனா லாக்டவுன் காரணமாக மாற்றங்கள் நடக்கலாம் என்பதால் ப்ளான் ‘பி’-யும் யோசித்துவருகிறார்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அதற்குள் படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள்.

அதோடு, இன்னொரு புது அப்டேட் ஒன்றும் இருக்கிறது. நடிகர் ஷேன் தாமஸ் சாக்கோ என்பவர் மலையாளத்தில் பல பிரபலமான படங்களில் நடித்தவர். குறிப்பாக, அவர் நடித்த இஷ்க் படத்தில் அவரின் நடிப்பு வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் அவரின் `லவ்' படம் வெளியானது. இந்நிலையில், விஜய் 65 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். மலையாளத்தைத் தாண்டி மற்ற மொழிகளில் படம் நடிக்கிறார் ஷேன். சென்னையில் பட டிஸ்கஷனுக்கு வந்தவர், "இன்னும் எனக்கு தமிழ் சரளமா பேச வராது. இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா பழகிட்டிருக்கேன். சில வார்த்தைகள் புரியலை. ஆனா, தமிழ்ல பேட்டிகள், படங்கள் எல்லாம் பாத்து கத்துகிட்டு இருக்கேன்" என்று கூறியிருக்கிறார். அதோடு, முழுமையாக தமிழ் கற்றுக் கொள்வதிலும் தீவிரமாக இருக்கிறாராம்.

- தீரன்

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு  விளக்கம்!

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

வியாழன் 6 மே 2021