மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 5 மே 2021

அஜித்தின் அடுத்தடுத்த 3 படங்களின் இயக்குநர்கள்!

அஜித்தின் அடுத்தடுத்த 3 படங்களின் இயக்குநர்கள்!

ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகிவரும் படம் “வலிமை”. இந்தப் படம் அஜித்தின் 60ஆவது படம். நேர்கொண்டப் பார்வை படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் இரண்டாவது முறையாக அஜித் இந்தப் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 95% முடிந்துவிட்டது. வெளிநாடு ஷெட்யூல் ஷூட்டிங் மட்டுமே மீதமிருக்கிறது. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்ட அப்டேட் அனைத்தும் மே 1ஆம் தேதி முதல் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஃபர்ஸ்ட் லுக்கைத் தள்ளிவைத்து விட்டது வலிமை படக்குழு.

இந்த நிலையில், அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் குறித்த பேச்சுவார்த்தை தீவிரமாகியிருக்கிறது. பொதுவாக, ஓர் இயக்குநரை அஜித்துக்குப் பிடித்துவிட்டால் அவருடன் இரண்டு, மூன்று படங்கள் என டிராவல் செய்வார். அப்படித்தான், வீரம், விவேகம், வேதாளம் மற்றும் விஸ்வாசம் என தொடர்ச்சியாக நான்கு படங்களை அஜித்துக்கு இயக்கினார் சிவா. அப்படி, ஹெச்.வினோத்துக்கு மூன்றாவது வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

அஜித்தின் அடுத்த மூன்று படங்களில் ஹெச்.வினோத்துக்கு இடம் இருக்காம். அதோடு, ஏற்கெனவே சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க பேசப்பட்டது. இறுதிச்சுற்று, சூரரைப்போற்று என தொடர்ச்சியாக ஹிட் லிஸ்ட்டைக் கொடுத்துவரும் நம்பிக்கைக்குரிய இயக்குநர். இவரைத் தொடர்ந்து, மீண்டும் இயக்குநர் சிவா இயக்கத்திலும் அஜித் நடிக்க இருக்கிறார் என்று சொல்கிறார்கள். ஆக, ஹெச்.வினோத், சுதாகொங்கரா மற்றும் சிவா என அஜித்தின் அடுத்தடுத்த மூன்று படங்களின் இயக்குநர்களாக இவர்கள் இருக்கவே வாய்ப்பு அதிகம் என்று சொல்லப்படுகிறது.

- தீரன்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்: விரைவில் விசாரணை அறிக்கை!

2 நிமிட வாசிப்பு

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்:  விரைவில் விசாரணை அறிக்கை!

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார் ...

3 நிமிட வாசிப்பு

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார்

புதன் 5 மே 2021