மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 5 மே 2021

தலைவி படத்தின் மைனஸ் யார் ? படம் பார்த்தவர்களின் கருத்து!

தலைவி படத்தின் மைனஸ் யார் ? படம் பார்த்தவர்களின் கருத்து!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக் திரைப்படமாக உருவாகியிருக்கிறது ‘தலைவி’. விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவாக கங்கனா மற்றும் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி, கலைஞராக நாசர், ஆர்.எம்.வீரப்பன் கேரக்டரில் சமுத்திரகனி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பாகுபலி படத்திற்கு திரைக்கதை எழுதிய விஜயேந்திரபிரசாத் மற்றும் மதன்கார்க்கி இருவரும் இணைந்து தலைவி படத்துக்கு கதை எழுதியிருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் படம் வெளியாக இருக்கிறது.

நடிகையாக ஜெயலலிதாவின் வாழ்க்கை எப்படி துவங்கியது, எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அரசியல் வாரிசாக ஜெயலலிதா எப்படி மாறினார், அரசியலில் பெண்ணாக ஜெயலலிதா சந்தித்த இன்னல்கள், அதன்பிறகான ஜெயலிதாவின் அரசியல் வாழ்க்கை என படம் நீள்கிறது. ‘மகாபாரததத்திற்கு இன்னொரு பெயர் ஜெயா’.... “என்னை அம்மாவா பார்த்தீங்கனா என் இதயத்தில் இடமிருக்கும். என்ன வெறும் பொம்பளயா பார்த்தீங்கனா’ என்பது போன்ற டிரெய்லரில் இடம் பெற்ற வசனங்கள் வைரலானது.

இப்படத்தை கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படம் தள்ளிப் போகியிருக்கிறது. தேர்தல் பரபரப்புக்கு மத்தியிலேயே வெளியிடத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், அது நடக்கவில்லை.

தலைவி படத்தை முழுமையாக தயார் செய்து, ஃபைனல் வீடியோவை எடுத்துவிட்டார்களாம். சமீபத்தில் தயாரிப்பில் அனுபவமிக்க, இயக்கத்தில் அனுபவமிக்க திரையுலகினர்கள் சிலர் இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறார்கள். படம் பற்றிய அவர்களின் கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

ஒரு நபரின் வாழ்க்கை வரலாற்று படமென்றால், அந்த நபர் செய்த நல்ல விஷயங்களை மட்டும் போசாமல், தவறுகளையும் சொல்ல வேண்டும். வெற்றிகளை மட்டும் சொல்லாமல் அவர் செய்த சறுக்கல்களையும் காட்சிப்படுத்த வேண்டும். ஆனால், தலைவி படமானது பயோபிக்காக இல்லாமல் ஜெயலலிதாவின் புகழ் பாடும் விளம்பர படமாக இருக்காம்.

இந்தப் படத்தில் அரவிந்த்சாமி, நாசர், சமுத்திரகனி என படத்தில் நடித்த அனைவருமே கேரக்டரில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்களாம். அட்டகாசமாக நடித்திருக்கிறார்களாம். ஆனால், ஒருவர் மட்டும் படத்தில் பெரும் மைனஸாக இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அது, கங்கனா ரணாவத். ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கொஞ்சம் கூட இவர் நடிப்பு ஒட்டவில்லை என்கிறார்கள். இது கங்கனா தவறா இல்லை, இயக்குநர் விஜய் சரியான நபரை தேர்ந்தெடுக்கவில்லையா என்பது தெரியவில்லை. ஒரு படத்தின் மெயின் ரோலே மைனஸாக இருந்தால், படம் எப்படி இருக்கும் என்பது குறித்த அச்சம் எழுவதை தவிர்க்கமுடியவில்லை.

- தீரன்

‘மருத’ படம் எப்படி?

4 நிமிட வாசிப்பு

‘மருத’ படம் எப்படி?

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' ரிலீஸ் எப்போது?

3 நிமிட வாசிப்பு

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு'  ரிலீஸ் எப்போது?

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

5 நிமிட வாசிப்பு

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

புதன் 5 மே 2021