மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 5 மே 2021

ஒருவழியாக நடிகரைத் தேடிப் பிடித்த ஏ.ஆர்.முருகதாஸ்

ஒருவழியாக நடிகரைத் தேடிப் பிடித்த ஏ.ஆர்.முருகதாஸ்

ஹிட் இயக்குநராக கொடிகட்டிப் பறக்கும் பலருக்கும் எதோ ஒரு நேரத்தில் சறுக்கல்களையும் சோதனைகளையும் சந்திக்க நேரிடும். அப்படி, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சோதனைகள் நிறைந்த காலக்கட்டத்தில் இருக்கிறார்.

அஜித் நடிக்க தீனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி என தொட்டதெல்லாம் ஹிட்டானது. இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவின் லைம் லைட்டில் இருந்தார். தமிழைத் தாண்டி இந்தி மற்றும் தெலுங்கு நடிகர்களையும் இயக்கிவந்தார். விஜய் நடித்த கத்தி படத்துக்குப் பிறகு, பெரிய ஹிட்டென எந்தப் படமும் முருகதாஸூக்கு அமையவில்லை என்பதே உண்மை.

மகேஷ்பாபு நடிக்க ஸ்பைடர், விஜய் நடிக்க சர்க்கார் மற்றும் ரஜினி நடிப்பில் தர்பார் என ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக வெளியான மூன்று படங்களுமே பாக்ஸ் ஆபீஸில் சுமாரான வரவேற்பைப் பெற்ற படங்களே. அதெப்படி, மூன்று நடிகர்களுமே உச்ச நடிகர்களாக இருக்கும் போது, அவர்களின் படங்கள் எப்படி வசூல் சாதனைப் படைத்திருக்காது என்று கேள்வி எழலாம். இந்த மூன்று படங்களுக்குமான பட்ஜெட்டைப் பொறுத்தே வசூல் சாதனை முடிவு செய்யப்படும். ஏ.ஆர்.முருகதாஸின் கடைசி மூன்று படங்களுமே நூறு கோடிக்கு மேல் பட்ஜெட்டில் உருவான படங்கள். பட்ஜெட்டைப் பொறுத்து தயாரிப்பு தரப்பு எதிர்பார்த்த பெரும் லாபம் ஈட்டவில்லை என்பதே உண்மை.

இருப்பினும், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க ‘விஜய் 65’ படத்தை இயக்க முதலில் ஒப்பந்தமானார் ஏ.ஆர்.முருகதாஸ். ஒரு அழகிய மாலை நேரத்தில் விஜய்யை சந்தித்துக் கதையையும் கூறினார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். அவர் சொன்னக் கதையில் விஜய்க்கு இருந்த கருத்துவேறுபாட்டால் இந்த கூட்டணி இணையவில்லை. அதன்பிறகே, ஏ.ஆர்.முருகதாஸூக்கு போக வேண்டிய வாய்ப்பு கைமாறி நெல்சனுக்குச் சென்றது. தற்பொழுது, நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிக்க ‘விஜய் 65’ பரபரப்பாக தயாராகிவருகிறது.

விஜய் இல்லையென்றாகிவிட்டது. அடுத்து யாரை இயக்க இருக்கிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனிமேஷன் படம் எடுக்க இருப்பதாக சொல்லப்பட்டது. குரங்கு லீட் ரோலில் நடிக்க அனிமேஷன் உருவாக இருக்கும் அனிமேஷன் படத்துக்கு முன்பாக ஒரு ஹீரோவை வைத்து படமொன்றை உருவாக்க வேண்டுமென்று திட்டமிட்டிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். அதற்காக தமிழ், தெலுங்கு சினிமா வட்டாரங்களில் நடிகரைத் தேடிப்பிடிக்கும் வேலையில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

தற்பொழுது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கும் நடிகர் யாரென்பது தெரிய வந்துள்ளது. தெலுங்கின் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜூனை இயக்க இருக்காராம் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படத்தை அல்லு அர்ஜூனின் தந்தை சுரேஷ் தயாரிக்க இருப்பதாகவும் ஒரு தகவல். ஏற்கெனவே, மகேஷ்பாபுவை இயக்கியவர் என்பதால், தெலுங்கில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்க தயாராகிவருகிறார். லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்க இருக்கிறார். அந்த வரிசையில் ஏ.ஆர்.முருகதாஸூம் தெலுங்கு நடிகரை நோக்கிச் சென்றிருக்கிறார். தமிழ் இயக்குநர் தெலுங்கு நடிகர்களைத் தேடிச் செல்லவும் காரணம் இருக்கிறது. தமிழ் இயக்குநர்களுக்கு தெலுங்கில் பெரிய மரியாதையும், வரவேற்பும் இருக்கிறதாம். நம் ஊரில் ரஜினி, விஜய்க்கு எந்த மாதிரியான வரவேற்பு இருக்குமோ, அதே வரவேற்பு தமிழ் இயக்குநர்களுக்கு தெலுங்கு திரையுலகில் இருக்கிறது. அதனால், கதையைச் சொல்லி ஓகே செய்வது மிக எளிது என்கிறார்கள்.

எது எப்படியோ, ஏ.ஆர்.முருகதாஸூக்கு நல்லது நடந்தால் சரிதான்!

- தீரன்

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

3 நிமிட வாசிப்பு

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

3 நிமிட வாசிப்பு

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

2 நிமிட வாசிப்பு

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

புதன் 5 மே 2021