மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 4 மே 2021

கலையுலகினரின் அரசியல் கனவு: வென்றவர்களும் வீழ்ந்தவர்களும்

கலையுலகினரின் அரசியல் கனவு: வென்றவர்களும் வீழ்ந்தவர்களும்

பொதுத் தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் சினிமா பிரபலங்களை கூட்டம் கூட்டுவதற்கு,பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக்கொள்வது உண்டு. அவ்வாறு பங்கேற்றவர்கள் அதற்கான ஊதியத்தை பெற்றுக் கொண்டு தங்கள் நடிப்பு தொழிலுக்கு தேர்தல் முடிந்தவுடன் திரும்பி விடுவார்கள்.

இதுவரை தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்களில் சினிமா பிரபலங்கள் இத்தனை பேர் போட்டியிட்டதில்லை, இந்த முறை திரைப் பிரபலங்கள் கமல்ஹாசன், சீமான் இருவரும் முதல்வர் வேட்பாளர்களாக களமிறங்கினார்கள். திமுக, பாஜக, மக்கள் நீதி மய்யம் கட்சிகளின் சார்பில் சினிமா பிரபலங்கள் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டனர். அவர்களின் வெற்றிதோல்வி பற்றிய பார்வை.

இந்தத் தேர்தலில் போட்டியிட்ட ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெறும் 1,708 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருவெற்றியூரில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான இயக்குநர் சீமான்,48,597வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகை ஸ்ரீப்ரியா 14,094 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியைச் சந்தித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்ட நடிகர் உதயநிதி ஸ்டாலின் 93,285 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

சென்னை, விருகம்பாக்கம் தொகுதியில் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் சார்பில் போட்டியிட்ட பாடலாசிரியர் சினேகன் தோல்வியடைந்துள்ளார். இவர் பெற்ற வாக்குகள் 16,939.இதே விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட திரைப்பட நகைச்சுவை நடிகரான மயில்சாமி மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்று படு தோல்வியடைந்துள்ளார். மயில்சாமி பெற்றுள்ள வாக்குகள் – 1440.

‘ஜிப்ஸி’ திரைப்படத்தின் தயாரிப்பாளரான S.அம்பேத்குமார் வந்தவாசி சட்டப் பேரவைத் தொகுதியில் ‘திராவிட முன்னேற்றக் கழக’த்தின் சார்பில் போட்டியிட்டு 1,02,064 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். திருவண்ணாமலை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட தயாரிப்பாளர் தணிகைவேல் 43,399 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். நடிகர் விஜய்யின் முன்னாள் பத்திரிகை தொடர்பாளரும் தயாரிப்பாளருமான P.T.செல்வகுமார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில். கன்னியாகுமரி தொகுதியில் போட்டிட்டு வெறும் 3500 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வியடைந்தார்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்ட நடிகர் மன்சூரலிகான் 428 வாக்குகளை மட்டுமே பெற்று மிகப் பெரிய தோல்வியை சந்தித்திருக்கிறார்.

சென்னை, ஆயிரம் விளக்குத் தொகுதியில் ‘பாரதீய ஜனதா கட்சி’யின் சார்பில் போட்டியிட்ட நடிகை குஷ்பூ 39,405 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்துள்ளார்.

கன்னியாகுமரி பாராளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக‘இந்திய தேசிய காங்கிரஸ்’ கட்சியின் சார்பில் போட்டியிட்ட திரைப்பட நடிகர் விஜய் வசந்த் 5,76,037 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இப்படி தமிழ்த் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் இந்தச் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டாலும், நடிகர் உதயநிதி ஸ்டாலினும், தயாரிப்பாளர் எஸ்.அம்பேத்குமாரும், பாராளுமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் வசந்தும்தான் வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-ராமானுஜம்

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

சிறந்த பிளாக் காமெடி திரைக்கதை ‘மண்டேலா’

2 நிமிட வாசிப்பு

சிறந்த பிளாக் காமெடி திரைக்கதை  ‘மண்டேலா’

செவ்வாய் 4 மே 2021