மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 4 மே 2021

11 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் ஹிட் கூட்டணி!

11 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் ஹிட் கூட்டணி!

தெலுங்கின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் த்ரிவிக்ரம். கதாசிரியராக சினிமாவில் நுழைந்தவர், அதன் பிறகு பட இயக்குநராகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர். குறிப்பாக, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் இந்த மூன்று நடிகர்களுக்கும் மிகப் பெரிய ஹிட் படங்களைக் கொடுத்தவர் த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ்.

அல்லு அர்ஜுனுக்கு 'ஜூலாயி', 'சன் ஆஃப் சத்யமூர்த்தி', 'அலா வைகுண்டபுரம்லோ' என மூன்றுமே ஹிட். பவன் கல்யாண் நடித்த 'ஜல்சா', 'அத்தாரிண்டிகி தாரேதி', 'அஞ்ஞாதவாசி' படங்களைக் கொடுத்தார். மகேஷ் பாபு நடிப்பில் 'அதடு', 'கலேஜா' என இரண்டு படங்கள் இயக்கியிருந்தார். இந்த நிலையில், த்ரிவிக்ரமின் அடுத்த படம் குறித்த தகவல் நீண்ட நாளாக பேசப்பட்டு வந்தது. த்ரிவிக்ரமின் அடுத்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், பிரபாஸ் பெயர்கள் அடிபட்டது.

இறுதியாக, மகேஷ்பாபு - த்ரிவிக்ரம் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 11 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தக் கூட்டணி இணைவதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

மகேஷ் பாபுவின் 28ஆவது படமாக உருவாக இருக்கிறது. பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எப்படியும், அடுத்த வருட 2022 சம்மருக்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். தற்போது, மகேஷ் பாபு நடிப்பில் 'சர்காரு வாரி பாட்டா' படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, த்ரிவிக்ரம் படம் தொடங்க இருக்கிறது.

மலையாளத்தில் ப்ருத்வி, பிஜூ நடிப்பில் வெளியாகி பெரிய ஹிட்டான ’அய்யப்பனும் கோஷியும்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கையும் கைவசம் வைத்திருக்கிறார் த்ரிவிக்ரம்.

- ஆதினி

ஜி.வி.பிரகாஷூக்கு ‘அசுரன்’ தெலுங்கு ரீமேக்கால் ஏற்பட்ட சோகம் ...

3 நிமிட வாசிப்பு

ஜி.வி.பிரகாஷூக்கு ‘அசுரன்’ தெலுங்கு ரீமேக்கால் ஏற்பட்ட சோகம் !

சிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளம்.. தயாரிப்பு தரப்பு இறங்கி ...

3 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளம்.. தயாரிப்பு தரப்பு இறங்கி வருமா ?

சார்பட்டா தாக்கம் ; ஆர்யாவின் இரண்டு புதுப் படங்கள் காட்டும் ...

3 நிமிட வாசிப்பு

சார்பட்டா தாக்கம் ; ஆர்யாவின் இரண்டு புதுப் படங்கள் காட்டும் அவசரம் !

செவ்வாய் 4 மே 2021