மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 மே 2021

ஐபிஎல்லில் கொரோனா: இன்றைய போட்டி ரத்து!

ஐபிஎல்லில் கொரோனா: இன்றைய போட்டி ரத்து!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இரு வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இன்று (மே 3) இரவு 7.30 மணிக்கு பெங்களூரு – கொல்கத்தா அணிகளுக்கிடையில் நடைபெறவிருந்த போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்டுள்ள இந்தப் போட்டி, வேறு தேதியில் ஒத்திவைக்கப்படுவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா இரண்டாம் அலையின் நடுவே இவ்வளவு நாட்களாக தடங்கல் இல்லாமல் நடந்துவந்த ஐபிஎல் போட்டிகளுக்கு இன்று (மே 3) பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இடையே இன்று இரவு அகமதாபாத்தில் போட்டி நடைபெற இருந்தது.

இந்த நிலையில், கொல்கத்தா அணியில் விளையாடும் தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி மற்றும் கேரளாவைச் சேர்ந்த சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் இன்றைய போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தோளில் ஏற்பட்ட காயத்துக்கு ஸ்கேன் எடுப்பதற்காக வருண் சக்ரவர்த்தி பயோ பபுளைவிட்டு மருத்துவமனைக்குச் சென்றதாகத் தெரிகிறது. மருத்துவமனை மூலம் அவருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என்றும் வருண், சந்தீப்பைத்தவிர வேறு யாருக்கும் கொல்கத்தா அணியில் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டிருப்பது, தொடர்ந்து ஐபிஎல் நடக்குமா என்கிற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது. கடந்த பிப்ரவரி - மார்ச் மாதம் பாகிஸ்தானில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீகில் இதேபோன்று வீரர்களுக்கு கொரோனா பரவியதால் தொடரே பாதியில் நிறுத்தப்பட்டது. அதுபோல் ஐபிஎல் தொடரும் நிறுத்தப்படலாம் என்கிற செய்திகள் இப்போது பரவ ஆரம்பித்திருக்கின்றன.

ஆனால், இதுவரை அதிகாரபூர்வமாக பிசிசிஐ, ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு தொடர்பாக எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

-ராஜ்

படக்குழுவினரைக் கண்கலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்

2 நிமிட வாசிப்பு

படக்குழுவினரைக் கண்கலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்

மத மாற்ற விழிப்புணர்வு குறித்து பேசும் ‘ருத்ர தாண்டவம்’!

23 நிமிட வாசிப்பு

மத மாற்ற விழிப்புணர்வு குறித்து பேசும் ‘ருத்ர தாண்டவம்’!

ஃப்ளைட்டில் ஃபைல்: அப்டேட் குமாரு

4 நிமிட வாசிப்பு

ஃப்ளைட்டில் ஃபைல்: அப்டேட் குமாரு

திங்கள் 3 மே 2021