மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 மே 2021

சரவணன் சூர்யாவாக மாற காரணமாக இருந்தவர் கே.வி.ஆனந்த்

சரவணன் சூர்யாவாக மாற காரணமாக இருந்தவர் கே.வி.ஆனந்த்

மறைந்த கே. வி ஆனந்த் நடிகர் சூர்யா நடித்து வெளியான அயன், காப்பான் படங்களை இயக்கியுள்ளார். இயக்குனராக ஆவதற்கு முன்பு புகைப்படம், ஒளிப்பதிவுக் கலைஞராக பணிபுரிந்தவர். அந்த காலகட்டத்தில் "நேருக்குநேர்"படத்திற்காக

மேக்கப் ஸ்டில்ஸ் எடுத்த போது கே.வி.ஆனந்துக்கும் தனக்கும் உள்ள உறவையும், தனது முன்னேற்றத்தில் அவரின் பங்களிப்பை நினைவு கூர்ந்துள்ளார் நடிகர் சூர்யா.

கே.வி.ஆனந்த் சார், இது பேரிடர்காலம் என்பதை உங்கள் மரணம் அறைந்து நினைவூட்டுகிறது. நீங்கள் இல்லை என்கிற உண்மை மனமெங்கும் அதிர்வையும் வலியையும் உண்டாக்குகிறது. ஏற்க முடியாத உங்கள் இழப்பின் மறக்கமுடியாத நினைவுகள் அலை அலையாக உயிர்தெழுகின்றன.

நீங்கள் எடுத்த புகைப்படங்களில் தான் 'சரவணன் சூர்யாவாக' மாறிய அந்த அற்புத தருணம் நிகழ்ந்தது. முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவனை சரியான கோணத்தில் படம் பிடித்து விட வேண்டும் என இரண்டு மணி நேரம் நீங்கள் கொட்டிய உழைப்பை இப்போதும் வியந்து பார்க்கிறேன். 'மெட்ராஸ் டாக்கீஸ்' அலுவலகத்தில் அந்த இரண்டு மணி நேரம் ஒரு போர்க்களத்தில் நிற்பதைப் போல உணர்ந்தேன். 'நேருக்குநேர்' திரைப்படத்திற்காக நீங்கள் என்னை எடுத்த அந்த 'ரஷ்யன் ஆங்கிள்' புகைப்படம் தான் இயக்குனர் வசந்த், தயாரிப்பாளர் மணிரத்னம் உள்ளிட்ட அனைவருக்கும் என் மீது நம்பிக்கை வர முக்கிய காரணம். புகைப்படத்தை விட பத்தாயிரம் மடங்கு பெரியதாக முகம் தோன்றும் வெள்ளித்திரையிலும் நடிகனாக என்னை படம் பிடித்ததும் நீங்கள்தான்.முதன் முதல் என் மீது பட்ட வெளிச்சம் உங்கள் கேமராவில் இருந்து வெளிப்பட்டது. அதன் மூலம் தான் என் எதிர்காலம் பிரகாசமானது. என்னுடைய திரையுலக பயணத்தில் உங்களின் பங்களிப்பும் வழிகாட்டலும் மறக்கமுடியாதது. 'வளர்ச்சிக்கு நீ இதையெல்லாம் மாற்றிக்கொள்ள வேண்டும்' என அன்புடன், அக்கறையுடன் சொன்ன வார்த்தைகள் இப்போதும் என்னை வழிநடத்துகின்றன. இயக்குனராக 'அயன்' படத்திற்கு நீங்கள் உழைத்த உழைப்பு ஒரு மாபெரும் வெற்றிக்காக காத்திருந்த எனக்குள் புதிய உத்வேகத்தை அளித்தது. 'அயன்' திரைப்படத்தின் வெற்றி அனைவருக்கும் பிடித்த நட்சத்திரமாக என்னை உயர்த்தியது என்பதை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். எனது முதல் திரைப்படத்தில் நீங்களும், உங்கள் கடைசி திரைப்படத்தில் நானும் பணியாற்றியது இயற்கை செய்த முரண். வாழ்வில் எங்கள் நினைவில் என்றும் நீங்கள் வாழ்வீர்கள் சார்... இதயபூர்வமான நன்றிஅஞ்சலி..''எனத் தெரிவித்துள்ளார்.

-ராமானுஜம்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

4 நிமிட வாசிப்பு

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

சனி 1 மே 2021