மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 மே 2021

வெளிநாட்டு இறக்குமதியுடன் ஒரு படத்தில் இத்தனை நாயகிகளா?

வெளிநாட்டு இறக்குமதியுடன் ஒரு படத்தில் இத்தனை நாயகிகளா?

தமிழில் `யாமிருக்க பயமே' படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் டிகே. அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டானது. பிறகு ஜீவா நடிக்க `கவலை வேண்டாம்' படத்தை இயக்கினார். அந்தப் படம் தோல்வியடைந்தது.

அதுக்குப் பிறகு இயக்கிய `காட்டேரி' இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் அடுத்தப் படத்தை இயக்கி முடித்துவிட்டார் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரெஜினா கசன்ட்ரா, ரைசா வில்சன், ஜனனி என நான்கு நடிகைகள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்துக்கு பெயர் எதுவும் உறுதிசெய்யப்படவில்லை.

இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துவங்கி நடந்துவருகிறது. டிகேவோட யாமிருக்க பயமே, காட்டேரி படங்கள் மாதிரி இதுவும் ஒரு ஹாரர் படமாக உருவாகிட்டு இருக்காம். காஜல் அகர்வால், ரெஜினா கசன்ட்ரா, ரைசா வில்சன், ஜனனி கூட ஐந்தாவதா Noyrika அப்டிங்கிற இரான் ஹீரோயினும் நடித்திருக்கிறார்.

படத்தில் ஒவ்வொரு நடிகைக்கும் ஒவ்வொரு குணம் இருக்கும், உதாரணமாக காஜலுக்கு சூப்பர் பவர் ஒன்று இருக்கும், ரைசாவுக்கு சொன்னதெல்லாம் பலிக்கும் கருநாக்கு. இதுபோல படம் முழுக்க நிறைய சுவாரஸ்யங்கள் இருக்கும் என சொல்லியிருக்கிறார் இயக்குனர் டிகே. சீக்கிரமே படத்தின் டைட்டில் & பர்ஸ்ட் லுக் எதிர்பார்க்கலாம்.

- ஆதினி

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

சனி 1 மே 2021