மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஏப் 2021

அப்படியா செல்லத்துரை காலமானார்

அப்படியா செல்லத்துரை காலமானார்

திரைப்படங்களில் பிரபலமான நட்சத்திரங்கள் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கிற போது அதற்கு ஊடக முக்கியத்துவம் கிடைக்கும். அதே நேரத்தில் துணை நடிகர்கள் தாங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு சர்வசாதாரணமாக உச்சகட்ட உயிர்ப்பை கொடுத்திருப்பார்கள். பல படங்களில் கதையின் மையகருவுக்கு இவர்களே உயிரோட்டமாக இருப்பதும் உண்டு. ஆனால் இவர்கள் முக்கியத்துவம் இன்றி கடந்து போகக்கூடிய நடிகர்களாகவே இன்று வரை ஊடகங்களால் ஒதுக்கிவைக்கப்படுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு நடிகர்தான் செல்லதுரை கத்தி, தெறி, மாரி, அறம், ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்தவர் செல்லதுரை. இவரது உணர்ச்சிகர நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டள்ளது. தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் அற்புதமாக நடிக்கும் ஆற்றல் கொண்டவர். இந்நிலையில் நேற்று அவருக்கு சுய நினைவு இல்லாமல் போனது, இதைத்தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்கள், அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். மாரி படத்தில் இவர் பேசிய பிரபலமான’அப்படியா விசயம்’என்கிற வசனம் அதிகமானோரைக் கவர்ந்த ஒரு வசனம். இவரது மரணச் செய்தியை ஏற்றுக்கொள்ள இயலாத இவரது ரசிகர்கள் இந்த வசனத்தை வைத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர். தெறி படத்தில் இவர் வெளிப்படுத்திய நடிப்பு அவருக்கு மேலும் ரசிகர்களை அதிகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

-ராமானுஜம்

‘மருத’ படம் எப்படி?

4 நிமிட வாசிப்பு

‘மருத’ படம் எப்படி?

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' ரிலீஸ் எப்போது?

3 நிமிட வாசிப்பு

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு'  ரிலீஸ் எப்போது?

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

5 நிமிட வாசிப்பு

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

வெள்ளி 30 ஏப் 2021