மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஏப் 2021

ஜார்ஜியாவில் நடந்த விஜய் 65 ஷூட்டிங்கில் என்ன நடந்தது ?

ஜார்ஜியாவில் நடந்த விஜய் 65 ஷூட்டிங்கில் என்ன நடந்தது ?

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘விஜய் 65’. அனிருத் இசையில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மனோஜ் பிரமஹம்சா ஒளிப்பதிவில் இந்தப் படம் உருவாகிவருகிறது. விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டே நடித்துவருகிறார்.

விஜய் 65 படத்தின் படப்பிடிப்பானது சென்னையில் இரண்டு நாட்கள் நடந்தது. அதன்பிறகு, ஒட்டுமொத்தப் படக்குழுவும் நேராக ஜார்ஜியா சென்றது. அங்கு 25 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது. சமீபத்தில், விஜய் உட்பட ஒட்டுமொத்த விஜய் 65 படக்குழு சென்னை திரும்பியுள்ளது.

ஜார்ஜியா படப்பிடிப்பில் என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது. விஜய் 65 படப்பிடிப்பு ரஷ்யாவில் தான் நடக்க இருந்தது. அதற்காக லொக்கேஷன் வரை பார்த்து வந்தார் நெல்சன். ஆனால், படக்குழு ஜார்ஜியா சென்றது. அதற்கு காரணம், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தானாம். பிரபாஸ் , பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகிவரும் ராதே ஸ்யாம் படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தான் நடந்தது. அந்தப் படத்தில் ஒளிப்பதிவாளரும் இவர் தான். ராதே ஸ்யாம் படத்துக்காக ஜார்ஜியா சென்றதில், அந்த இடம் இவருக்கு ரொம்ப பிடித்துப் போக, விஜய் 65க்கும் ஜார்ஜியாவை பரிந்துரைத்தார். அப்படித்தான், படக்குழு ஜார்ஜியா சென்றது.

படத்தின் கதையானது காஷ்மீரில் நடப்பது போன்றதாம். காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்த முடியாது என்பதால், ஜார்ஜியாவில் எடுத்து காஷ்மீர் போல மேட்ச் செய்ய வேண்டுமென்பது திட்டம். அதோடு, தீவிரவாதிகளுடன் விஜய் சண்டைப் போடுவது போன்ற காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்கள். சண்டைக் கலைஞர்களான அன்பறிவ் இரட்டையர்கள் இந்த சண்டைக் காட்சியை இயக்கியிருக்கிறார்கள்.

ஜார்ஜியாவில் திடீரென இடியுடன் மழை பெய்யுமாம், திடீரென குளிராகுமாம், திடீரென வெயில் வந்துவிடுமாம். இப்படி, சீரான வானிலை நிலவாததால், நினைத்தப் படி படப்பிடிப்பை எடுக்கமுடியவில்லை என்று சொல்கிறார்கள்.

அடுத்தக் கட்டமா, சென்னையில் சுமார் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்காக சென்னையில் மிகப்பெரிய செட் அமைக்கும் பணிகள் போய்க் கொண்டிருக்கிறது. கூடுதல் தகவல் என்னவென்றால், ஒரு மிகப்பெரிய வணிகவளாகம் (ஷாப்பிங் மால்) போன்ற செட் அமைத்து வருவதாக தகவல். அந்த அரங்கத்தில்தான் நாற்பது நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமாம்.

- தீரன்

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

படக்குழுவினரைக் கண்கலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்

2 நிமிட வாசிப்பு

படக்குழுவினரைக் கண்கலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

வெள்ளி 30 ஏப் 2021