மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஏப் 2021

ஒளிப்பதிவாளர் இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்

ஒளிப்பதிவாளர் இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்

புகைப்பட கலைஞர், ஒளிப்பதிவாளர், இயக்குனர் என பன்முக ஆளுமை திறன் கொண்ட கே.வி.ஆனந்த், திடீர் மாரடைப்பு காரணமாக இன்று(ஏப்ரல் 30) அதிகாலை 3மணியளவில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார்.அவருக்கு வயது 54. கே.வி.ஆனந்த் 90களில் ஒளிப்பதிவாளராக தனது திரைப்பயணத்தை துவக்கினார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக சேர்ந்து கோபுர வாசலிலே, மீரா, திருடா திருடா, தேவர் மகன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பணியாற்றினார்.

பின்னர் 1994ஆம் ஆண்டு மலையாளத்தில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான ‘தென்மாவின் கொம்பத்து’ படத்தில் முதன்முதலாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது கே.வி.ஆனந்துக்கு கிடைத்தது.

பிறகு 1996ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளியான ‘காதல் தேசம்’ படத்தில் தமிழில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அப்படம் நல்ல வரவேற்பை பெறவே பின்னர் தொடர்ந்து நேருக்கு நேர், முதல்வன், பாய்ஸ், செல்லமே, சிவாஜி உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.2005ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ‘கனா கண்டேன்’ படத்தின் மூலம் கே.வி.ஆனந்த் இயக்குநராக அறிமுகமானர். வணிகரீதியாக படம் வெற்றியடையவில்லை என்றாலும் படைப்புரீதியாக பாராட்டப்பட்ட படம் இது. 2009ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் ஆனந்த் இயக்கிய ‘அயன்’ படம் சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து 2011ஆம் வெளியான ‘கோ’ படத்தின் வெற்றி கே.வி.ஆனந்தை தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக முன்னிறுத்தியது.இறுதியாக 2019ஆம் ஆண்டு சூர்யா நடித்த ‘காப்பான்’ படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார்.

-ராமானுஜம்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

அடப்பாவிகளா, இதையே இப்பதான் உணர்றீங்களா..?

3 நிமிட வாசிப்பு

அடப்பாவிகளா, இதையே இப்பதான் உணர்றீங்களா..?

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

3 நிமிட வாசிப்பு

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

வெள்ளி 30 ஏப் 2021