மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 29 ஏப் 2021

நெட்ஃப்ளிக்ஸில் ஜெகமே தந்திரம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு !

நெட்ஃப்ளிக்ஸில் ஜெகமே தந்திரம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு !

இந்த வருடம் தனுஷ் நடிப்பில் மூன்று படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில், மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படம் கடந்த ஏப்ரல் 09ஆம் தேதி வெளியானது. இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு, கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் 50% திரையரங்க அனுமதியோடு வெளியாகியும் வசூல் ரீதியாகவும் நல்ல கலெக்‌ஷன்களை அள்ளியது.

இந்நிலையில், தனுஷூக்கு அடுத்த ரிலீஸாக ஜெகமே தந்திரம் படம் வெளியாக இருக்கிறது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ரிலீஸூக்குத் தயாராக இருக்கும் படம் ‘ஜெகமே தந்திரம்’. இந்தப் படத்தில் தனுஷூக்கு நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

தனுஷ் - கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியானது 2016ஆம் ஆண்டே அறிவிப்பு வெளியானது. ஆனால், ரஜினிக்காக தனுஷ் விட்டுக் கொடுத்தார். கார்த்திக் சுப்பராஜ் முதலில் ‘பேட்ட’ இயக்கிய பிறகே, இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷின் கேரக்டர் பெயர் சுருளி. மதுரையில் பெரிய ரவுடியாக இருக்கும் சுருளி லண்டனில் செய்யும் ஆக்‌ஷன் அதகளமே படம்.

ஜெகமே தந்திரம் படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வருகிற ஜூன் 18ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 18+ திரைப்படமென்பதையும் அறிவித்துள்ளது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்.

இந்த வருடத்தின் மூன்றாவது ரிலீஸாக, பாலிவுட்டில் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘அட்ராங்கி ரே’. ஆனந்த் எல்ராய் இயக்கத்தில் அக்‌ஷய்குமார் மற்றும் சாரா அலிகான் ஆகியோருடன் தனுஷ் நடித்துவரும் இந்தப் படத்தின் ரிலீஸானது வருகிற ஆகஸ்ட் 6ஆம் தேதி ரிலீஸ் என்பது ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

- ஆதினி

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வியாழன் 29 ஏப் 2021