மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 29 ஏப் 2021

மலையாள நடிகரை மீண்டும் தேர்வு செய்த இயக்குநர் ராம்

மலையாள நடிகரை மீண்டும் தேர்வு செய்த இயக்குநர் ராம்

மலையாளத் திரையுலகின் இளம் தலைமுறை நடிகர்களில் மிக முக்கியமானவர் நவின்பாலி.

கதைத் தேர்விலும், நடிப்பிலும் அசத்துபவர். நிவின்பாலி என்றதும் பிரேமம் படம் நினைவுக்கு வருவதைத் தவிர்த்துவிட முடியாது. மலையாளத்தில் உருவாகியிருந்தாலும், தமிழ் ரசிகர்களையும் நடிப்பினால் ஈர்த்தார் நிவின்பாலி. கடைசியாக, நயன்தாராவுடன் லவ் ஆக்‌ஷன் டிராமா படமும், கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் மூத்தோன் படமும் நடித்திருந்தார். அடுத்ததாக, துறைமுகம் படம் இவருக்கு மலையாளத்தில் வெளியாக இருக்கிறது.

தமிழில் நேரம் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து, ரிச்சி எனும் படத்தில் நடித்தார். அதன் பிறகு, தமிழில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. மீண்டும், தமிழில் படமொன்றை நடிக்க இருக்கிறார். இயக்குநர் யாரென்பது தான் சர்ப்ரைஸ்.

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி மற்றும் பேரன்பு படங்களை இயக்கியவர் ராம். இவரின் அடுத்தப் படத்தில் நாயகனான நிவின்பாலி நடிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் இந்தப் படம் உருவாக இருக்காம்.

இவர் இயக்கிய கடைசி திரைப்படமான பேரன்பு படத்தின் ஹீரோவாக மம்மூட்டி நடித்திருந்தார். இந்தப் படம் பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றது. மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், இவரின் அடுத்த படத்தின் தேர்வாகவும் மலையாள நடிகரே இருக்கிறார்.

- ஆதினி

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

3 நிமிட வாசிப்பு

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

2 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

வியாழன் 29 ஏப் 2021