மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஏப் 2021

பொய் சொன்னால் அறை விழும் - நடிகர் சித்தார்த்

பொய் சொன்னால் அறை விழும் - நடிகர் சித்தார்த்

தமிழ் சினிமா நடிகர்களில் சமூக வலைத்தளத்தில் பொது மற்றும் அரசியல் விஷயங்களில் உடனுக்குடன் கருத்தை தெரிவிப்பது, விமர்சனம் செய்வதில் உயிரோட்டமாக இயங்கக் கூடியவர் நடிகர் சித்தார்த்.

கடந்த வாரம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனைட்விட்டரில் டேக் செய்து கொரானாவின் கூட்டாளி என்று விமர்சனம் செய்திருந்தார். இந்த வாரம் உத்தரப் பிரதேச முதல்வர் யோகியை எச்சரித்து பதிவிட்டுள்ள சித்தார்த்"பொய் சொன்னால் அறை விழும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கொரோனா முதலாம் அலையின்போது பெரிதாக பாதிக்கப்படாத, உயிர் சேதங்கள் ஏற்படாத மாநிலமான உத்திரப் பிரதேசத்தில் இரண்டாம் அலையில் சிக்கி மக்கள் சின்னாபின்னமாகி வருகின்றனர். அந்த மாநிலத்தில் கொரானா உயிரிழப்புகளும், நோய்த்தொற்றும் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது நிலத்தில் அரசு எந்திரம் சிறப்பாக செயல்பட்டு கொரோனா தொற்றை கட்டுக்குள் வைத்திருப்பதாகவும், ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு இங்கு இடமில்லை எனக் கூறி வருகிறார்.

முதல்வரின் இந்த கருத்து உத்திரபிரதேசத்தின் உண்மை நிலவரத்திற்கு நேர் எதிராக உள்ளது என ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன. ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுவதாக வதந்தி பரப்புபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என யோகி எச்சரிக்கை விடுத்திருந்தார். கடந்த வாரம் மத்திய சுகாதார துறை அமைச்சரை கொரோனா கூட்டாளி என விமர்சித்திருந்தார் சித்தார்த்.

தற்போது உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை ட்விட்டரில் எச்சரித்து பதிவிட்டுள்ள சித்தார்த்"பொய் சொன்னால் ஓங்கி அறை விழும்" என குறிப்பிட்டிருக்கிறார் இது தொடர்பாக யோகி குறித்த செய்தி ஒன்றினை உதாரணமாக குறிப்பிட்ட சித்தார்த்" சாமானியனாக இருந்தாலும் சரி, புனிதராக இருந்தாலும் சரி, எந்த தலைவராக இருந்தாலும் சரி, பொய் சொன்னால் அறை விழும்" என்று பதிவிட்டிருந்தார்

இந்தியாவில் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட மாநிலம் உத்திரப் பிரதேசம் , அம்மாநிலத்தின் முதல்வர் சக்தி மிக்க தலைவராக கருதப்படக் கூடிய யோகிக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை நடிகர் சித்தார்த் வெளியிட்டிருப்பது இந்திய திரையுலகில் விவாதப் பொருளாகியுள்ளது.

-ராமானுஜம்

.

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

2 நிமிட வாசிப்பு

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

4 நிமிட வாசிப்பு

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

பிக்பாஸ் ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

5 நிமிட வாசிப்பு

பிக்பாஸ்  ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

புதன் 28 ஏப் 2021