மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஏப் 2021

கர்ணன் தெலுங்கு ரீமேக் உரிமை விற்பனை

கர்ணன் தெலுங்கு ரீமேக் உரிமை விற்பனை

கலைப்புலி தாணு தயாரிப்பில் தனுஷ் நடித்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் தமிழ் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமை வியாபாரமாகியுள்ளது.

இந்திய திரையுலகில் வெளியான ஒரு படம் வணிகரீதியாக வெற்றிபெற்றால் அப்படத்தை பிறமொழிகளில் படமாக்க கடுமையான போட்டி நிலவும் அதன் காரணமாக வெற்றிபெற்ற படத்தின் ரீமேக் உரிமை நல்ல விலைக்கு வியாபாரமாகும்.

கர்ணன் படத்திற்கு தமிழக திரையரங்குகளில் குறுகிய நாட்களில் சுமார் 60 கோடி ரூபாய் மொத்த வசூல் ஆகியுள்ளது இதன் மூலம் தயாரிப்பாளருக்கு சுமார் 40 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைத்திருக்க வேண்டும் என்கிறது வணிக தகவல்கள். இதன் காரணமாக கர்ணன் படத்தின் தெலுங்கு உரிமையை தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் பெல்லம் கொண்டா சுரேஷ் வாங்கியுள்ளார். தனது மகனும் தெலுங்கு நடிகருமான பெல்லம் கொண்டா சாய்ஸ்ரீநிவாஸ் நாயகனாக நடிப்பதற்காக இதன் உரிமையை அவர் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

சாய்ஸ்ரீநிவாஸ் தெலுங்கில் இதுவரை எட்டு படங்களில் நடித்திருக்கிறார். அதில் சசிக்குமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன், அமலாபால் நடித்துள்ள ராட்சசன் படங்களின் ரீமேக்கும் உள்ளது. தற்போது கர்ணன் படத்தில் நடிக்க உள்ளார், படத்தை இயக்கப்போவது, மற்றும் நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரங்கள் அதிகாரபூர்வமாக விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

-ராமானுஜம்

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

3 நிமிட வாசிப்பு

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

3 நிமிட வாசிப்பு

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

2 நிமிட வாசிப்பு

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

புதன் 28 ஏப் 2021