மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஏப் 2021

கொரோனா விழிப்புணர்வு போஸ்டர் வெளியிட்ட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்

கொரோனா விழிப்புணர்வு போஸ்டர் வெளியிட்ட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்

வோர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பொன்.புலேந்திரன், ஏ.என்.மைக்கேல் ஜான்சன் தயாரிக்கும் படம் அடங்காமை. இந்தப் படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் ஆர்.கோபால். இவர், தன் முதல் படமாக 'மங்களாபுரம்' என்ற படத்தை இயக்கியவர். இது இவருக்கு இரண்டாவது படம். இலங்கையைச் சேர்ந்த சரோன் நாயகனாக நடித்திருக்கிறார். பிரபல விளம்பர மாடலான பிரியா கதாநாயகி. சிறுவயதிலிருந்து ஒன்றாகப் பழகிய மூன்று நண்பர்கள் ஆளுக்கொரு லட்சியத்தோடு வளர்கிறார்கள். அதன்படி அவர்களில் ஒருவன் டாக்டராகவும் இன்னொருவன் நடிகனாகவும் மற்றொருவன் அரசியல்வாதியாகவும் மாறுகிறார்கள்.

டாக்டரை வளர்த்தெடுத்த பாதிரியார் மர்மமாகக் கொலை செய்யப்படுகிறார். அதுமட்டுமல்ல... டாக்டரின் காதலியின் அக்காவும் கொலை செய்யப்படுகிறாள். கொலைக்கான மர்மம் புரியாமல் குழம்பிப்போய் நண்பர்களின் உதவியை நாடுகிறான் மூவரில் ஒருவனான டாக்டர். ஆனால், உடனிருக்கும் அவர்களால்தான் இந்தச் சதி நடந்துள்ளது என்று பிறகே தெரிய வருகிறது. அவர்களை எப்படிப் பழிவாங்குவது? பழகிய நட்பில் பழிவாங்குதல் அறமல்ல என்று அவன் அஞ்சித் தயங்குகிறான். ஆனால், அவன் எதிர்பார்த்த தீர்ப்பு எதிர்பாராத வகையில் இயற்கை மூலம் கிடைக்கிறது. இதுதான் அடங்காமை படத்தின் கதை.

"திருக்குறள் வாழ்வியல் நெறிகளை இரண்டே வரிகளில் கூறும் அற்புதமான நூல். அதிலும் குறிப்பாக 'அடக்கமுடைமை' அதிகாரத்தில் முதலில் வரும் 'அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்' என்ற குறள் 100 பேருந்துகளில் 95 பேருந்துகளிலாவது இடம்பெற்றிருக்கும். ஏன் இந்த வாழ்வியல் சிந்தனை மட்டும் எல்லாவற்றிலும் இருக்கிறது என்பதை யோசித்தபோது அதை வைத்து உருவான கதைதான் 'அடங்காமை' படமாக உருவாகியிருக்கிறது" என்கிறார் இயக்குநர் கோபால்.

"அடக்கமாக இருத்தல் இப்போதைய கொரோனா காலத்தில் மிகவும் வலியுறுத்தப்படும் ஒன்றாகும். அடங்காமையே அத்தனை துன்பங்களுக்கும் காரணம் என்று எச்சரித்து ஊரடங்கு போட்டு அரசாங்கமே இப்போது பிரச்சாரம் செய்கிறது.

எனவே அடங்காமையை எச்சரித்து கொரோனா விழிப்புணர்வு குறித்து ஒரு மோஷன் போஸ்டரையும் நாங்கள் உருவாக்கினோம் அதில் கைகள் தொடுதல் மூலம் நோய் வரும் அபாயத்தைக் கூறி 'நிலைமை அறிவோம்; மடமை தவிர்ப்போம்; அரசின்அறிவுரை ஏற்போம்' என எச்சரித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் படத்தின் மோஷன் போஸ்டரை படத்தின் டைட்டிலுடன் மூத்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களை வெளியிட செய்தோம்" என்கிறார் இயக்குநர்.

'அடங்காமை' படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது,

"பொதுவான வழக்கமாகப் படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் படத்தின் டைட்டிலை மட்டும் மோஷன் போஸ்டர் ஆக வெளியிடுவார்கள். இதில் படத்தின் பெயருடன் கொரோனா பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த மோஷன் போஸ்டரை

உருவாக்கியிருக்கிறார்கள். இப்போது மக்களுக்குத் தேவை விழிப்புணர்வுதான். இந்த போஸ்டரை வெளியிட்டதன் மூலம் நானும் அந்த விழிப்புணர்வு பணியில் பங்கு எடுத்துக்கொள்கிறேன்" என்றார்.

-ராமானுஜம்

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

4 நிமிட வாசிப்பு

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

2 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

புதன் 28 ஏப் 2021