மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 27 ஏப் 2021

ஐபிஎல்: ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்திய கொல்கத்தா!

ஐபிஎல்: ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்திய கொல்கத்தா!

அகமதாபாத்தில் நேற்று (ஏப்ரல் 26) இரவு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்ஸ் எதிரான ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 21ஆவது லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணியின் கே.எல்.ராகுல் - மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கே.எல்.ராகுல் 19 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிறிஸ் கெய்ல் டக் அவுட்டானார். கிறிஸ் ஜோர்டான் 18 பந்தில் 30 ரன்கள் அடிக்க, பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 123 ரன்கள் சேர்த்தது. மயங்க் அகர்வால் அதிகபட்சமாக 31 ரன்கள் சேர்த்தார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சார்பில் பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளும், சுனில் நரைன் 2 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி, மாவி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான நிதிஷ் ரானா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஷுப்மான் கில் 9 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த சுனில் நரைன் டக் அவுட்டானார்.

ஓரளவு பொறுப்புடன் ஆடிய ராகுல் திரிபாதி 41 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய கேப்டன் மார்கன் சிறப்பாக விளையாடி 47 ரன்னுடன் அவுட்டாகாமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதியில், கொல்கத்தா அணி 16.4 ஓவரில் 126 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது கொல்கத்தா பெற்ற இரண்டாவது வெற்றி ஆகும். பஞ்சாப் அணி பெற்ற நான்காவது தோல்வி ஆகும்.

இன்று (ஏப்ரல் 27) இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் 22ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியும் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

தலா நான்கு வெற்றி, ஒரு தோல்வியைச் சந்தித்துள்ள பெங்களூரு - டெல்லி அணிகள் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் உள்ளன. ஐந்தாவது வெற்றியை ருசிக்க இரு அணிகளும் கடுமையாகப் போராடும் என்பதால் இந்த ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

-ராஜ்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

செவ்வாய் 27 ஏப் 2021