மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 27 ஏப் 2021

ஆஸ்கர் விருது போட்டியில் ஆதிக்கம் செலுத்திய பெண்கள்

ஆஸ்கர் விருது போட்டியில் ஆதிக்கம் செலுத்திய பெண்கள்

சினிமா ரசிகர்களால், திரைப்படத் துறை சார்ந்தவர்களால் உயர்ந்த கௌரவமாக கருதப்படும் 93வதுஆஸ்கர் விருது ஏப்ரல் 25 அன்று அறிவிக்கப்பட்டது. எப்போதும் வியாபார முக்கியத்துவமுள்ள ஆண்கள் அதிக அளவில் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். 93வது ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் அதிகளவு பெண்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர், அதேபோன்று விருது வென்றவர்கள் பட்டியலிலும் பெண்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். கோல்டன் குளோப் விருதை வென்று எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "நோமேட்லேண்ட்" சிறந்த திரைப்படம், இயக்கம், நடிப்பு என பல பிரிவுகளில் விருதை பெற காரணமாக இருந்த இப்படத்தின் இயக்குனர் க்ளோயிஸாவ் பெண் என்பதுடன் ஆஸ்கர் விருதை பெறும் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது . இந்தப் படத்தின் கதையும் வேலை இழந்த ஒரு பெண் பற்றிய கதையாகும். நோமேட்லேண்ட் படத்தில் நாயகியாக நடித்துள்ள ஃபிரான்சிஸ் மெக்டார் மண்ட் மூன்றாவது முறையாக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை பெறுகிறார். தென் கொரிய நாட்டை சேர்ந்த 73வயது நிரம்பிய, தொலைக்காட்சி நடிகையான "யூ ஜங் யூன்" மினாரி திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த குணசித்திர துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை பெறும் முதல் கொரிய நாட்டை சேர்ந்தவராவார்.

இங்கிலாந்தை சேர்ந்த 35 வயதான இயக்குனரும், நடிகையுமான எமரால்ட் ஃபென்னெல், ப்ராமிஸிங் யங் வுமன் என்கிற படத்தின் நேரடி திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை பெற்றுள்ளார். நெட்ஃப்ளிக்சின் தயாரிப்பான " மை ஆக்டோபஸ் டீச்சர்" சிறந்த ஆவணப்படத்துக்கான விருதை வென்றுள்ளது .இந்த படத்தின் இயக்குனர்களில் ஒருவரான பிப்பா எக்ஹ்லிச்ம் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

-ராமானுஜம்

ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

3 நிமிட வாசிப்பு

ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

ஐபிஎல் 2021: நான்காவது முறையாகக் கோப்பையை வென்ற சென்னை அணி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல் 2021: நான்காவது முறையாகக் கோப்பையை வென்ற சென்னை அணி!

அண்ணாத்த டீசர் முழுவதும் ரஜினி

5 நிமிட வாசிப்பு

அண்ணாத்த டீசர் முழுவதும் ரஜினி

செவ்வாய் 27 ஏப் 2021