மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 27 ஏப் 2021

அவசரமாக தனுஷ் - மாரிசெல்வராஜ் கூட்டணி அறிவிக்க காரணம்

அவசரமாக தனுஷ் - மாரிசெல்வராஜ் கூட்டணி அறிவிக்க காரணம்

தனுஷ் நடிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 09ஆம் தேதி வெளியான படம் ‘கர்ணன்’. தனுஷூடன் லால், ரஜிஷா விஜயன், யோகிபாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு மேற்கொண்டிருந்தார். படமும் வெளியாகி பெரியளவில் வரவேற்பைப் பெற்றுவருகிறது. பல்வேறு சிக்கல்களைத் தாண்டியும் திரையரங்கில் நல்ல வசூலையும் பெற்றது.

கர்ணன் வெளியாகி ஒரு மாதம் கூட முழுமையாக முடியாத சூழலில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரு ட்விட் ஒன்றைப் போட்டார் தனுஷ். அதில், மீண்டும் மாரிசெல்வராஜ் - தனுஷ் கூட்டணி இணைவது உறுதி என்பதை பதிவிட்டார். அதோடு, அடுத்த வருடம் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் தனுஷ். அதோடு, தமிழில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் 43, செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படங்கள் அடுத்தடுத்து உருவாக இருக்கிறது. அதோடு, மித்ரன் ஜவகர் இயக்கும் படம், பாலாஜி மோகன் இயக்க இருக்கும் படம், வெற்றிமாறன், ராட்சசன் ராம்குமார் படங்களும் அடுத்தடுத்து லைன் அப்பில் இருக்கிறது.

இத்தனை இயக்குநர்கள் வரிசையில் இருக்கும் போது அவசரமாக கர்ணன் கூட்டணி மீண்டும் இணைகிறது என்கிற அறிவிப்பு அவசரகெதியில் வெளியிட என்ன காரணம் எனும் கேள்வி எழுகிறது. அதோடு, நடிகரும், இயக்குநரும் முடிவெடுத்தால் மட்டும் போதாது. ஒரு தயாரிப்பாளர் இன்றி ஒரு படம் துவங்கிவிட முடியாது. தனுஷின் அறிவிப்பில் தயாரிப்பாளர் யாரென்பதும் குறிப்பிடவில்லை. இதுகுறித்து விசாரித்தால் புது தகவல் சிக்கியது.

ஒரு மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமொன்று மாரிசெல்வராஜை சமீபத்தில் அணுகியிருக்கிறது. அந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒரு படமொன்று இயக்க வேண்டுமென்று கோரிக்கையும் வைக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக, அட்வான்ஸ் தொகை கொடுத்து ஒப்பந்தம் போட்டுவிட துடித்திருக்கிறார்கள். ஆனால், தனுஷூக்கு அந்த தயாரிப்பு நிறுவனத்தில் படம் பண்ண விருப்பமில்லை என்றே சொல்கிறார்கள். இருப்பினும், மாரிசெல்வராஜ் என்ன செய்வதென தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த நிலையில், அவருக்காக உடனடியாக தனுஷ் - மாரிசெல்வராஜ் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டாராம் தனுஷ்.

- தீரன்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

4 நிமிட வாசிப்பு

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

செவ்வாய் 27 ஏப் 2021