மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 27 ஏப் 2021

கவர்ச்சியிலிருந்து கம்பீரத்துக்கு மாறிய மல்லிகா ஷெராவத்

கவர்ச்சியிலிருந்து கம்பீரத்துக்கு மாறிய மல்லிகா ஷெராவத்

ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி,மலையாளம் , கன்னடம், என ஐந்து மொழிகளில் தயாராகும் படம்" பாம்பாட்டம்"

இந்த திரைப்படத்தை கதை,திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் V.C.வடிவுடையான் . "நான் அவன் இல்லை" படத்தின் மூலம் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ஜீவன் கதாநாயகனாக நடித்துவருகிறார். கதாநாயகிகளாக ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் இருவரும் நடிக்கிறார்கள். மல்லிகா ஷெராவத் நடிக்கிறார் என்றால் அப்படத்தில் கவர்ச்சி தூக்கலாக இருக்கும் என்பார்கள். இவற்றில் இருந்து வித்தியாசமாக தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இளவரசி நாகமதி கதாபாத்திரத்தில் மல்லிகா ஷெராவத் கம்பீரமாக நடித்திருக்கிறார் அவர் நடித்திருக்கும் நாகமதி கதாபாத்திரத்தின் முதல் பார்வையை படக்குழு வெளியிட்டிருக்கிறது.

மல்லிகா ஷெராவத் குதிரையில் வருவது போல் வெளியாகியுள்ள போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.1800, 1947, 1990 என மூன்று கால கட்டங்களில் நடக்கும் வரலாற்று பின்னணி கொண்ட ஹாரர் மற்றும் திரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுளதாக கூறும் இயக்குனர் V.C.வடிவுடையான் இதற்காக பிரம்மாண்டமான அரங்குகள் செட்டுகள் அமைத்து.

படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது என்றார்.

-ராமானுஜம்

.

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

8 நிமிட வாசிப்பு

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

செவ்வாய் 27 ஏப் 2021