மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஏப் 2021

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் அஷ்வின்: காரணம் என்ன?

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் அஷ்வின்: காரணம் என்ன?

2021, ஐபிஎல் டி20 தொடரிலிருந்து டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளருமான அஷ்வின் ரவிச்சந்திரன் விலகியுள்ளார்.

இதற்கான காரணம் குறித்து, கொரோனா வைரஸ் பரவலின்போது குடும்பத்துடன் இருக்கவேண்டிய அவசியம் இருப்பதால் விலகியதாக அஷ்வின் தெரிவித்துள்ளார். அதேநேரம், சூழல் நல்லபடியாக மாறினால், நான் அணிக்குள் மீண்டும் வருவேன் என்றும் அஷ்வின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் அஷ்வின், “2021 ஐபிஎல் தொடரிலிருந்து நாளை (ஏப்ரல் 27) முதல் நான் விடைபெற்றுக் கொள்கிறேன். கொரோனா வைரஸுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் இந்த நேரத்தில் அவர்களுக்காக இந்த கடினமான நேரத்தில் உடன் இருப்பது அவசியம். அனைத்தும் சரியான திசையில் சென்றால் நான் மீண்டும் அணியில் சேர்வேன் என எதிர்பார்க்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த கடினமான தருணத்தில் அஷ்வினுக்கு முழு ஆதரவு அளிப்பதாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி நிர்வாகமும் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

நாளை (ஏப்ரல் 27) இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முன்னணியிலுள்ள டெல்லி அணி, அதற்கு சமமான பெங்களூரு அணியுடன் மோதுகிறது. நேற்று (ஏப்ரல் 25) நடைபெற்ற போட்டியில் டெல்லி அணி சூப்பர் ஓவரில் ஹைதராபாத்தை வீழ்த்தியது

-ராஜ்

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

ஜெய் பீம் கதைக்களம்!

2 நிமிட வாசிப்பு

ஜெய் பீம்  கதைக்களம்!

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

2 நிமிட வாசிப்பு

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

திங்கள் 26 ஏப் 2021