மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஏப் 2021

ஐபிஎல்: சூப்பர் ஓவரில் ஹைதராபாத்தை வீழ்த்திய டெல்லி!

ஐபிஎல்: சூப்பர் ஓவரில் ஹைதராபாத்தை வீழ்த்திய டெல்லி!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 25) இரவு நடைபெற்ற போட்டியில் சூப்பர் ஓவரில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது டெல்லி அணி.

ஐபிஎல் தொடரின் 20ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதினது. டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு செய்தது. தவான், பிரித்வி ஷா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

பிரித்வி ஷா தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடினார். ஷிகர் தவான் 28 ரன்கள் அடித்தார். பிரித்வி ஷா அரை சதம் அடித்து 53 ரன்னில் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 37 ரன்னிலும், ஹெட்மையர் ஒரு ரன்னிலும் வெளியேறினர்.

இறுதியில், டெல்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 159 ரன்கள் அடித்தது. ஸ்மித் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியது. டேவிட் வார்னர், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

வார்னர் 7 ரன், பேர்ஸ்டோவ் 38 ரன், விராட் சிங் 4 ரன், கேதார் ஜாதவ் 9 ரன், அபிஷேக் வர்மா 5 ரன், ரஷீத் கான் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேன் வில்லியம்சன் நிலைத்து நின்று அரை சதமடித்தார். அவருடன் விஜய் சங்கர் இணைந்தார்.

கடைசி 2 ஓவரில் வெற்றி பெற 28 ரன்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரில் விஜய் சங்கர் அவுட்டாக, 16 ரன்கள் கிடைத்தது. இறுதியில், ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனானது. இதைத் தொடர்ந்து ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்றது.

ஹைதராபாத் அணி முதலில் ஆடியது. வார்னரும், கேன் வில்லியம்சனும் இறங்கினர். அக்சர் படேல் பந்து வீசினார். ஒரு ஓவரில் அந்த அணி 7 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அடுத்து ஆடிய டெல்லி அணி 6 பந்தில் வெற்றிக்குத் தேவையான ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இது டெல்லி அணி பெற்ற நான்காவது வெற்றி. ஹைதராபாத் அணி பெற்ற நான்காவது தோல்வி.

இன்று (ஏப்ரல் 26) இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் 21ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன.

-ராஜ்

திறந்தவெளியில் ஜெய்பீம் படத்தைக் கண்டுகளித்த மக்கள்!

3 நிமிட வாசிப்பு

திறந்தவெளியில் ஜெய்பீம் படத்தைக் கண்டுகளித்த மக்கள்!

பிரமாண்டமாக நடக்கும் கத்ரினா கைப் திருமணம்!

2 நிமிட வாசிப்பு

பிரமாண்டமாக நடக்கும் கத்ரினா கைப் திருமணம்!

கபில் தேவ் உரிமையைப் பெற்ற பிரித்வி ராஜ்

2 நிமிட வாசிப்பு

கபில் தேவ் உரிமையைப் பெற்ற பிரித்வி ராஜ்

திங்கள் 26 ஏப் 2021