மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 ஏப் 2021

இரண்டாவது அலை: தள்ளிப்போகும் வலிமை முதல் பார்வை!

இரண்டாவது அலை:  தள்ளிப்போகும் வலிமை முதல் பார்வை!

தமிழ் சினிமாவில் 2021ம் வருடம் எதிர்பார்க்கப்பட்ட முக்கியமான படங்களில் அஜித்குமார் நடிக்கும் வலிமையும் ஒன்று. தமிழக திரையரங்குகளில் சுமார் 120 கோடி ரூபாய் அளவிற்கு டிக்கட் விற்பனை மூலம் வருவாய் கிடைக்கும் என விநியோகஸ்தர்களால் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்குள்ளாகவே சுமார் 60 கோடி ரூபாய்க்கு தமிழக உரிமை விநியோக அடிப்படையில் வியாபார ஒப்பந்தம் போடப்பட்டது.

அஜித்குமார் ரசிகர் மன்றங்கள் அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்ட பின்னரும் தமிழ்நாடு முழுவதும் வெறித்தனமாக இளைஞர், மாணவர் கூட்டம் தன்னெழுச்சியாக அஜித்துக்காக திரள்கிறது. இவர்களே அஜித்குமாரின் பெரும் பலமாக கருதப்படுகிறார்கள். அதனால்தான் இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியின் போதும், பிரதமரின் சென்னை வருகையின் போதும் ‘வலிமை அப்டேட்’ எப்போது என்ற வாசகங்கள் அடங்கிய அட்டையும், கோஷங்களும் எழுந்தன

ரசிகர்களின் இந்த அத்து மீறிய செயல் தயாரிப்பாளர் போனி கபூர், அஜித்குமார் இருவருக்கும் பொதுவெளியில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

தன்னைப் பற்றிய எந்தவொரு கடுமையான விமர்சனங்களுக்கு கூட பதில் சொல்லாமல் மௌனமாக கடந்துபோகக் கூடியவர் அஜித்குமார். ரசிகர்களின் இதுபோன்ற அத்துமீறிய ஆர்வக் கோளாறு செயல்கள் தொடரக் கூடாது என்று அஜித்குமார் தரப்பில் இருந்து அறிக்கை வெளியானது. அதன்பின் படத்தின் முதல் பார்வை போஸ்டர் அஜித் பிறந்தநாளான மே 1ம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ‘வலிமை’ பட முதல் பார்வை வெளியீட்டு தேதியை தள்ளி வைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

“எங்கள் நிறுவனத்தின் சார்பில் நாங்கள் கொடுத்த முந்தைய அறிக்கையில் வருகின்ற மே 1ம் தேதி அஜித்குமார் அவர்களின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான வலிமை படத்தின் முதல் பார்வை வெளியிடுவதாக அறிவித்து இருந்தோம். அந்த அறிவிப்பு வெளிவரும்போது கொரானா நோயின் இரண்டாவது அலை வரும் என்றோ அதன் தாக்கம் சுனாமி போல தாக்கும் என்றோ சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

இந்த தருணத்தில் தேசமெங்கும்எண்ணற்றோர் பொருளாதாரம் இழந்து உற்றார் உறவினர் உயிர் இழந்து நோய் பற்றிய பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்திருக்கின்றனர். இத்தகைய அசாதாரண சூழ்நிலையில் ஜீ ஸ்டுடியோஸ், பேவியூ புராஜக்ட்ஸ் இப்படத்தில் நடித்துள்ள கலைஞர்கள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்துள்ள முடிவின்படி வலிமை படத்தின் முதல் பார்வை மற்றொரு தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து அனைவரின் நலத்துக்காகவும் பாதுகாப்புக்காகவும் பிரார்த்திப்போம்” என கூறப்பட்டுள்ளது.

நேர் கொண்ட பார்வை படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித், கார்த்திகேயா, ஹுமா குரேஷி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வலிமை’

-ராமானுஜம்

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

ஜெய் பீம் கதைக்களம்!

2 நிமிட வாசிப்பு

ஜெய் பீம்  கதைக்களம்!

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

2 நிமிட வாசிப்பு

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

ஞாயிறு 25 ஏப் 2021