மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 ஏப் 2021

அண்ணாத்த டீம் வேகம் காட்ட காரணம்!

அண்ணாத்த டீம் வேகம் காட்ட காரணம்!

தயாரிப்பு தரப்பான சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் இரண்டு பெரிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள். ஒன்று, விஜய் நடிக்கும் விஜய் 65. இரண்டு, ரஜினி நடிப்பில் உருவாகிவரும் ‘அண்ணாத்த’.

இவ்விரண்டு படங்களில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து வருகிறது. டாக்டர் இயக்கியிருக்கும் நெல்சன் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

ரஜினி நடித்துவரும் அண்ணாத்த படத்தை சிவா இயக்கி வருகிறார். அஜித் நடித்த வீரம், விசுவாசம், விவேகம் மற்றும் வேதாளம் படங்களை இயக்கியவர். இமான் இசையில் வெற்றி ஒளிப்பதிவில் படுவேகமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.

ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். கொரோனாவுக்கு முன்பே 60% படப்பிடிப்பைப் படக்குழு முடித்திருந்தது. மீதம் இருக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். ஏற்கனவே, டிசம்பரில் படப்பிடிப்பை நடத்தினார்கள். அப்போது, படக்குழுவில் கொரோனா தோற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு நின்றது. அதன்பிறகு சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.

புது தகவல் என்னவென்றால், எப்போதும் போல் இல்லாமல் மின்னல் வேகத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறதாம். திட்டமிட்ட நாளுக்கு முன்பாக படத்தை முடித்து விடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அதன்படி பார்த்தால், வருகிற மே 10-க்குள் படப்பிடிப்பு முடிந்து விடுமாம். தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதே இந்த வேகத்துக்கு காரணம் என்கிறார்கள். ஏனெனில், கொரோனா அச்சுறுத்தலால் எப்போது என்ன நடக்கும் என தெரியாது. அதனால், சீக்கிரம் முடித்துவிடலாம் என வேகம் காட்டுகிறார்கள்.

கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டால் நிச்சயம் தீபாவளிக்கு திரையரங்கில் அண்ணாத்த ரிலீஸ் ஆவது உறுதி. இல்லையென்றால், சன் டிவியில் நேரடியாக வெளியானால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

- ஆதினி

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

ஞாயிறு 25 ஏப் 2021