மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஏப் 2021

மீண்டும் களம் இறங்கும் ஜெனிஃபர் லோபஸ்

மீண்டும் களம் இறங்கும் ஜெனிஃபர் லோபஸ்

ஹாலிவுட்டின் சென்சேஷனல் நாயகி ஜெனிஃபர் லோபஸ். இவர் நடிப்பில் இறுதியாக 2019ல் Hustlers படம் வெளியானது. அந்த படம் செம ஹிட். அதன்பிறகு எந்த படமும் நடிக்காமல் இருந்தார். தற்போது, புதிய பட அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜெனிஃபர்.

ஜெனிஃபரின் அடுத்த பட டைட்டில் ‘ஷார்ட்கன் வெட்டிங்’. இந்த படத்துக்கான படப்பிடிப்பு முடிந்து விட்டது எனும் அப்டேட் தான் வெளியிட்டுள்ளார்.

இந்தப் படத்தை `பிட்ச் பர்ஃபெக்ட்', `சிஸ்டர்ஸ்' படங்களை இயக்கிய ஜேசன் மூர் இயக்கியிருக்கிறார். கதை இதுதான், டெஸ்டினேஷன் வெட்டிங்கிற்காக செல்லும் தம்பதியின் கல்யாணம், மொத்தமாக தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்படுகிறது. கல்யாணத்துக்கு வந்தவர்களுடைய உயிரைக் காப்பாற்ற அந்த மணமக்கள் என்ன செய்தார்கள் என்பதே படத்தின் கதை. செம காமெடி ரகளையாக இருக்கும் என்கிறார்கள்.

கல்யாணப் பெண் ரோலில் ஜெனிஃபர் நடித்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த படத்துக்கு முன்பாக ஜெனி நடித்து முடிந்திருக்கும் `மேரி மீ' அடுத்த வருடம் பிப்ரவரி ரிலீஸ் ஆக இருக்கிறது. இதைத் தொடர்ந்து தான் ‘ஷாட்கன் வெட்டிங்’ படம் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

- ஆதினி

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

ஜெய் பீம் கதைக்களம்!

2 நிமிட வாசிப்பு

ஜெய் பீம்  கதைக்களம்!

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

2 நிமிட வாசிப்பு

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

சனி 24 ஏப் 2021