மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஏப் 2021

தமிழக வீரர் டி.நடராஜன் இல்லாத ஐபிஎல் - காரணம் என்ன?

தமிழக வீரர் டி.நடராஜன் இல்லாத ஐபிஎல் - காரணம் என்ன?

யார்க்கர் பந்து வீச்சில் வல்லவரான தமிழக வீரர் டி நடராஜன் தற்போது நடந்துவரும் ஐபிஎல் தொடரில் இடம்பெறவில்லை. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து அணி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தின் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் தமிழக வீரர் டி.நடராஜன். கடந்த சீசனில் ஏராளமான யார்க்கர் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட வைத்தார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று தொடர்களிலும் அறிமுகம் ஆனார்.

2021 சீசனில் புவியுடன் டி.நடராஜன் சேர்ந்து பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கத்தில் களம் இறங்கினார். கொல்கத்தாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் விளையாடினார். நடராஜன் 37 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

அதன்பின் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளது. மூன்று போட்டிகளிலும் டி.நடராஜன் இடம் பெறவில்லை. அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதால் விளையாடவில்லை என அணி நிர்வாகம் தெரிவித்தது. இந்த நிலையில் கால் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலியா தொடர் முடிந்த பின்னர், பிசிசிஐயின் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இரண்டு மாதங்கள் செலவழித்தார். அவரது காயம் குறித்து என்சிஏ பிசியோ கண்காணித்து பிசிசிஐயிடம் ஆலோசித்ததாகவும், அதன்பின், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் கலந்தாலோசித்து அவரை மேலும் விளையாட வைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘‘நாங்கள் முழுமையான அறிக்கை பெறவில்லை. ஆனால், அவரது கால் மூட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் காயத்தில் இருந்து மீள்வதற்கான சிகிச்சைக்காக தேசிய கிரிக்கெட் அகாடமிக்குச் செல்வார்’’ என நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்தி வந்துள்ளது.

சிறந்த டெத் ஓவர் பந்து வீச்சாளரான டி.நடராஜன் தொடரில் இருந்து விலகியிருப்பது ஹைதராபாத் அணிக்கு மிகப்பெரிய பேரிடியாகயும் தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவும் அமைந்துள்ளது.

-ராஜ்

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

3 நிமிட வாசிப்பு

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

2 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

சனி 24 ஏப் 2021