மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஏப் 2021

பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கில் மணிரத்னம் போட்ட புது திட்டம்

பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கில் மணிரத்னம் போட்ட புது திட்டம்

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகிவரும் படம் பொன்னியின் செல்வன். இயக்குநர் மணிரத்னத்தின் கனவுத் திரைப்படமாக உருவாகிவருகிறது.

பொன்னியின் செல்வன் நாவலை மையமாகக் கொண்டு பல இயக்குநர்கள் படமாக்க திட்டமிட்டும் முடியாமல் போனது. இப்போது, மணிரத்னம் அதை சாத்தியமாக்கி வருகிறார். இரண்டு பாகமாக உருவாகும் பொன்னியின் செல்வனின் முதல் பாகப் படப்பிடிப்பு 70% முடிந்துவிட்டது. ஹிஸ்டாரிக்கல் டிராமாவான இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், தோட்டா தரணி கலை இயக்கத்தில் படம் உருவாகிவருகிறது.

இந்தப் படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் டிசம்பர் 2019ல் தாய்லாந்தில் துவங்கியது. அதன்பிறகு, சில நாட்கள் சென்னை & பாண்டிச்சேரியில் நடந்தது. அதோடு, கொரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு நடக்கவில்லை. இந்தியாவுக்குள் லைவ் லொக்கேஷனில் படமாக்க பலமுறை திட்டமிட்டும் நடக்கவில்லை. இறுதியாக, கடந்த இரண்டு மாதங்களாக படத்தின் பெரும்பகுதியை படமாக்கி மார்ச் மாதத்துடன் படப்பிடிப்பை முடித்தனர்.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் முதல் பாகத்துக்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மே மாதம் துவங்க திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவிவருவதால் மணிரத்னத்தின் அலுவலகத்துக்கு காலவரையற்ற விடுப்பு விடுக்கப்பட்டுள்ளது. இறுதி ஷெட்யூல் எப்போது துவங்கும் என விசாரித்தால், மே மாதத்துக்குப் பதிலாக ஜூன் மாதம் படப்பிடிப்பை துவங்க இருக்கிறார்களாம்.

புதிய லொக்கேஷன் தேடி வட இந்தியாவுக்கு ஒரு ட்ரிப் செல்ல திட்டமிட்டிருந்தார் மணிரத்னம். கடும் கொரோனா அச்சுறுத்தலால் அது நடக்காது என்றே சொல்கிறார்கள். அதனால், புதிய இடத்தில் படப்பிடிப்பு நடப்பதும் சந்தேகம் என்கிறார்கள். முந்தைய கட்ட ஷூட்டிங் நடந்த ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டி மற்றும் சென்னை பிலிம் சிட்டியில் ஜூனில் துவங்கும் படப்பிடிப்பையும் முடித்துவிட திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்.

- தீரன்

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

2 நிமிட வாசிப்பு

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

4 நிமிட வாசிப்பு

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

பிக்பாஸ் ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

5 நிமிட வாசிப்பு

பிக்பாஸ்  ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

சனி 24 ஏப் 2021