மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஏப் 2021

தனுஷ் - மாரிசெல்வராஜ் இணைவது கர்ணன் 2-வா? புதிய தகவல் !

தனுஷ் - மாரிசெல்வராஜ் இணைவது கர்ணன் 2-வா? புதிய தகவல் !

திறமைமிக்க இளம் இயக்குநர்களை தேர்ந்தெடுத்து பட வாய்ப்புகளைக் கொடுப்பவர் நடிகர் தனுஷ். வெற்றிமாறனை கண்டெடுத்த மாதிரி, மாரி செல்வராஜையும் கண்டெடுத்து தன்வசம் வைத்திருக்கிறார்.

பொதுவாக, முதல் படத்திலேயே பெரிய ஹிட் கொடுக்கும் இயக்குநர்களைத் தேடிச் சென்று கதை கேட்கும் பழக்கம் தனுஷூக்கு உண்டு. அப்படித்தான், ‘துருவங்கள் பதினாறு’ கார்த்திக் நரேன், ‘ராட்சசன்’ இயக்குநர் ராம் குமார் மற்றும் ‘பரியேறும் பெருமாள்’ மாரிசெல்வராஜ் ஆகியோர் தனுஷை இயக்கும் வாய்ப்பைப் பெற்றனர். இவர்களி, மாரி செல்வராஜ் மீண்டும் தன்னை ‘கர்ணன்’ படம் மூலமாக நிரூபித்துவிட்டார்.

தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, நட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘கர்ணன்’ வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டது. இந்நிலையில், மீண்டும் மாரிசெல்வராஜூக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார் தனுஷ். ட்விட்டர் பக்கத்தில் ‘ கர்ணனின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை நானும் மாரிசெல்வராஜும் கைகோர்க்கிறோம். முதல்கட்டப் பணிகள் துவங்கிவிட்டது. அடுத்த வருடம் படம் தயாராகும்” என்று தனுஷ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் யாரென்பது குறித்த எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை. ஏனெனில், தயாரிப்பாளர் இன்னும் யாரென்பது உறுதியாகவில்லை என்பதுதான் உண்மை. தற்பொழுது, ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்காவில் இருக்கிறார் தனுஷ். கர்ணன் வெற்றிக்குப் பிறகு, தனுஷிடம் போன் காலில் பேசியிருக்கிறார் மாரிசெல்வராஜ். அப்போது, தனுஷ், ‘மீண்டும் இணைந்து படம் பண்ணலாம். கதை ஏதும் இருக்கிறதா?’ என்று கேட்டிருக்கிறார். அப்போது, மாரி செல்வராஜ் ஒரு ஒன்லைன் சொல்ல தனுஷூக்குப் பிடித்துப் போய் விட்டதாகச் சொல்கிறார்கள்.

கர்ணன் இரண்டாம் பாகம் இல்லை என்பது மட்டும் உறுதி என்கிறார்கள் நம்பத்தகுந்த வட்டாரத்தினர். புது கதை. புதிய களம் என்கிறார்கள். தனுஷூக்கான கதையை உருவாக்கிவருகிறார் மாரி செல்வராஜ். அதே நேரம், துருவ் விக்ரம் நடிக்க கபடியை மையமாக கொண்டு ஸ்போர்ட்ஸ் டிராமாவை அடுத்து இயக்க இருக்கிறார் மாரிசெல்வராஜ். இந்தப் படம் முடிந்ததும், தனுஷ் படத்தில் முழு வீச்சில் இறங்குவார் என்று சொல்லப்படுகிறது.

- ஆதினி

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

சனி 24 ஏப் 2021