மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஏப் 2021

சோதனை மேல் சோதனையா? விக்ரம் படங்களின் ரிலீஸில் மாற்றம்

சோதனை மேல் சோதனையா? விக்ரம் படங்களின் ரிலீஸில்  மாற்றம்

நடிகர் விக்ரமுக்கு பெரிய ஹிட் என சமீபத்தில் எந்த படமும் இல்லை. தற்பொழுது அவர் நடித்து வரும் படங்களையே பெரிதும் நம்பி இருக்கிறார். அப்படி, விக்ரமின் கைவசம் மூன்று படங்கள் இருக்கிறது. ஒன்று, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா , மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சியான் 60.

இந்த மூன்று படங்களில் கோப்ரா மற்றும் சியான் 60 படங்களை லலித் குமார் தயாரித்து வருகிறார். இவர் , லோகேஷ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடித்த மாஸ்டர் பட இணைத் தயாரிப்பாளர். படத்தை லாபகரமாக முடித்து வெளியிடுவதில் கில்லாடி. இப்போது, இவரின் படத்திலேயே மிகப் பெரிய மாற்றம் நடந்திருக்கிறது. என்னவென்றால், விக்ரம் 58வது படம் கோப்ரா. அதன்படி, 59வது படம் பொன்னியின் செல்வன். ஆக, விக்ரம் 60-வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார்.

தயாரிப்பாளர் லலித் திட்டத்தின் படி, இந்நேரம் கோப்ரா படம் முடிந்து ரிலிஸுக்குத் தயாராகியிருக்க வேண்டும். ஆனால் இயக்குனரின் முயல் வேகத்தால் படம் முடியவில்லை. இந்தப் படத்துக்கு சொன்ன தேதியை விட அதிக நாட்கள் படமாக்கியும் விட்டார்கள். இருப்பினும் படம் முடியவில்லை. இப்படியான சூழலில் , விக்ரம் 58 ஆன கோப்ரா படத்துக்கு முன்பாக , விக்ரம் 60 படம் முடிந்து வெளியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது. கோப்ரா படத்தை தள்ளி வைத்து விட்டு, சியான் 60 பட வேலைகளில் இறங்கி விட்டார் தயாரிப்பாளர் லலித். எப்படியும் பொன்னியின் செல்வனும் பெரிய பட்ஜெட் படமென்பதால் வெளியீடு தாமதம் ஆகலாம்.

இப்படங்களோடு கெளதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படமும் முடியாமல் இருக்கிறது. விக்ரம் படம் வெளியாகி பெரிய வரவேற்பை பெறவில்லை என்று நினைத்தால், பட ரிலீஸும் சிக்கலாகவே இருக்கிறது. ஆக, விக்ரமின் அடுத்த ரிலீசாக மகன் துருவ் விக்ரமுடன் நடிக்கும் சியான் 60 வெளியாகும் என்பதே லேட்டஸ்ட் தகவல்.

- தீரன்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

சனி 24 ஏப் 2021