மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 23 ஏப் 2021

இத்தனை பேர்களா? தனுஷூக்காகக் காத்திருக்கும் இயக்குநர்கள் !

இத்தனை பேர்களா? தனுஷூக்காகக் காத்திருக்கும் இயக்குநர்கள் !

தமிழ் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் படங்களென தொடர்ச்சியாக நடித்துவரும் நடிகர் தனுஷ். கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளிலும் நடிக்காமல், கதைத் தேர்வில் கவனமாக இருப்பவர் தனுஷ் என்பது, அவரின் பட வெற்றியை வைத்து புரிந்துகொள்ளலாம்.

பரியேறும் பெருமாள் எனும் படத்தின் மூலம் அறிமுகமான மாரி செல்வராஜூக்கு இரண்டாம் பட வாய்ப்பை தனுஷ் வழங்கினார். அப்படி, உருவான கர்ணன் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில், மீண்டும் மாரிசெல்வராஜூக்கு இயக்க வாய்ப்புக் கொடுத்திருக்கிறார் தனுஷ். மீண்டும் தனுஷ் - மாரிசெல்வராஜ் கூட்டணி இணைகிறது என்பதை ட்விட்டரில் உறுதியும் செய்துள்ளார் தனுஷ். படத்துக்கான முன் கட்டப் பணிகள் நடந்துவருவதாகவும், அடுத்த ஆண்டு படம் துவங்கும் எனவும் தெரிவித்துள்ளார் தனுஷ்.

சரி, தனுஷை இயக்க காத்திருக்கும் இயக்குநர்கள் யார் யாரென லிஸ்ட் எடுத்தால் ஒரு பெரிய பட்டியலே வருகிறது. தற்பொழுது, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜெகமே தந்திரம், ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்‌ஷய்குமாருடன் அட்ராங்கி ரே படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது.

லேட்டஸ்டாக, ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் க்ரே மேன் எனும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார் தனுஷ். இந்தப் படத்தை முடித்துவிட்டு, தனுஷ் 43 படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கிவருவது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் 43 முடித்தகையோடு, செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படம் உருவாக இருக்கிறது. அதோடு, மாரி, மாரி 2 இயக்கிய பாலாஜி மோகன் இயக்கத்தில் உடனடியாக ஒரு படம் நடிக்க இருக்கிறார் தனுஷ். இவ்விரு படங்களுக்குப் பிறகு, ராட்சசன் இயக்குநர் ராம்குமார் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் படங்களுக்கு ஒப்பந்தமாகியிருக்கிறார். இதற்கு நடுவே, மித்ரன் ஜவகர் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தின் அறிவிப்பும் ஏற்கெனவே வெளியானது. ஆக, மித்ரன் ஜவகரும் தனுஷூக்காக வெயிட்டிங்கில் இருக்கிறார். இலவச இணைப்பாக, ஆயிரத்தில் ஒருவன் 2 படமும் தனுஷ் நடிக்க வேண்டியிருக்கிறது நினைவிருக்கலாம்.

இந்த வரிசையில் மாரி செல்வராஜூம் இணைந்திருக்கிறார். எப்படியும், மேற்கண்ட இயக்குநர்களுக்கு படங்களை முடிக்கவே குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிடும்.

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்க பா.ரஞ்சித் இயக்கத்தில் ஸ்போர்ட் டிராமாவை இயக்க தயாராகி வருக்கிறார் மாரி செல்வராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

- ஆதினி

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

2 நிமிட வாசிப்பு

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

4 நிமிட வாசிப்பு

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

பிக்பாஸ் ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

5 நிமிட வாசிப்பு

பிக்பாஸ்  ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

வெள்ளி 23 ஏப் 2021