மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 23 ஏப் 2021

விஜய் 65 படக்குழுவில் கொரோனா தொற்று ?

விஜய் 65 படக்குழுவில் கொரோனா தொற்று ?

இளம் நடிகர்களைத் தேர்ந்தெடுத்துத் தொடர்ச்சியாகப் பட வாய்ப்புகளை வழங்கிவருகிறார் நடிகர் விஜய். கடைசியாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிக்க மாஸ்டர் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்தக் கட்டமாக, விஜய் 65 படத்தையும் விஜய் துவங்கிவிட்டார். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் விஜய் 65 படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சமீபத்தில் அல்லு அர்ஜூனுடன் நடித்திருந்த அல வைகுண்டபுரமுலோ படத்தில் புட்ட பொம்மா பாடல் மூலமாக பிரபலமானவர். தமிழில் ஜீவாவுடன் முகமூடி படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் என்பது கூடுதல் தகவல்.

அதுபோல, நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நெல்சன். இவரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க டாக்டர் ரிலீஸூக்கு தயாராக இருக்கிறது. மூன்றாவது படத்தில் விஜய்யை இயக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் 65 படத்தின் பூஜையானது சமீபத்தில் நடந்தது. முதல்கட்டமாக, ஜார்ஜியாவில் விஜய் கலந்துகொள்ள படப்பிடிப்பு மும்மரமாக நடந்துவருகிறது. இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு மேற்கொண்டுவருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றும் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. விஜய் 65 படப்பிடிப்பில் குறைந்தது 100 பேர் பணியாற்றிவருகிறார்கள். சென்னையிலிருந்து கிளம்பும் போதும், ஜார்ஜியாவிலும் என இரண்டு இடங்களிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதோடு, கொரோனா முன்னெச்சரிக்கையுடனே படப்பிடிப்பும் நடந்து வந்திருக்கிறது

இத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தாண்டி படப்பிடிப்பு தளத்தில் இருவருக்கு கொரோனா வந்ததால் படக்குழு கடும் அதிர்ச்சியாகிவிட்டதாம். அதோடு, கொரோனா தொற்றுள்ளவர்களை தனிமைப் படுத்தி முறையான மருத்துவ வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது படக்குழு.

விஜய் 65 படப்பிடிப்பினை ஜார்ஜியாவில் வருகிற 26ஆம் தேதிக்குள் முடித்துவிட்டு சென்னை திரும்பவும் திட்டமிட்டுள்ளது படக்குழு.

- தீரன்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

அடப்பாவிகளா, இதையே இப்பதான் உணர்றீங்களா..?

3 நிமிட வாசிப்பு

அடப்பாவிகளா, இதையே இப்பதான் உணர்றீங்களா..?

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

3 நிமிட வாசிப்பு

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

வெள்ளி 23 ஏப் 2021