மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 22 ஏப் 2021

வாவ்... மீண்டும் எதிர்பார்ப்பை தூண்டும் வெற்றிமாறன் பட ஃபர்ஸ்ட் லுக்

வாவ்... மீண்டும் எதிர்பார்ப்பை தூண்டும் வெற்றிமாறன் பட ஃபர்ஸ்ட் லுக்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிவரும் அடுத்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தனித்துவமான சினிமாவை தொடர்ச்சியாக கொடுத்துக் கொண்டிருக்கும் இயக்குநர் வெற்றிமாறன். இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் ஆகச் சிறந்த படைப்புகளை தந்துகொண்டிருக்கிறார். இவரின் ஒவ்வொரு படமுமே ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டுள்ளது.

பாலு மகேந்திராவின் பயிற்சிப் பட்டறையிலிருந்து சினிமா கற்றறிந்து, தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் வெற்றிமாறன். ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், பாவக்கதைகள் என ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார்.

இந்த வரிசையில், வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்க சமீபத்தில் ஒரு படம் துவங்கியது. சூரிக்கு இணையான ரோலில் விஜய்சேதுபதி நடிக்கிறார். சத்தியமங்கலம் காடுகளில் படத்துக்கான படப்பிடிப்பு நடந்துமுடிந்திருக்கிறது. இந்தப் படத்துக்கு விடுதலை என டைட்டில் அறிவித்துள்ளனர். அதோடு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இளையராஜா புதிய ஸ்டுடியோவை துவங்கினார். அந்த ஸ்டுடியோவில் முதலில் இசைக் கோர்ப்பு பணிகள் நடந்தது இந்தப் படத்துக்கு தான். வெற்றிமாறனின் ஆஸ்தான வேல்ராஜ் படத்துக்கு ஒளிப்பதிவு மேற்கொண்டிருக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருக்கிறது. வெற்றிமாறனுடன் இணைந்து எல்ரெட் குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

படத்தில் சூரி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். தற்பொழுது, படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுவருகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்க வாடிவாசல் மற்றும் தனுஷ் நடிக்கும் படத்தினை இயக்க இருக்கிறார் வெற்றிமாறன்.

- ஆதினி

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

8 நிமிட வாசிப்பு

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

வியாழன் 22 ஏப் 2021